This Article is From Apr 13, 2019

மோடி மீது பொய் குற்றச்சாட்டு: ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் அடங்கிய பாஜக குழு ஒன்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தனர்.

மோடி மீது பொய் குற்றச்சாட்டு: ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாஜக குழு தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தது.

ஹைலைட்ஸ்

  • ராகுல் காந்தி குறித்து தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்
  • பிரதமர் மோடியை ’திருடன்’ என்கிறார் ராகுல்.
  • ராகுலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
New Delhi:

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு எதிராக உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பி வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஏற்கனவே ராகுலுக்கு எதிராக பாஜக அளித்த புகார்கள் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது மீண்டும் பாஜக புகார் அளித்துள்ளது.

பிரதமர் மோடி 'ஒரு திருடன்' ரஃபேல் போர் விமானம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறாததை, ராகுல் பொய்யாக பிரசாரம் செய்து வருகிறார் என பாஜக குழு தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், முக்தார் அப்பாஸ் நக்வி, பாஜக ஊடகப் பிரிவு தலைவர் அனில் பாலுனி உள்ளிட்டோர் அடங்கிய பாஜக குழு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.

முன்னதாக, பாஜக எம்.பி மீனாட்சி லேகி, ரஃபேல் போர் விமானம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறாததை, ராகுல் பொய்யாக கூறிவருவதாகவும் அவர் மீது குற்றவியல் அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்திருந்தார்.

தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, உச்சநீதிமன்றத்தை மேற்கொள்காட்டி பிரதமர் மோடியை 'திருடன்' எனவும் அவர் மீது மேலும், பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளையும் ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார்.

பிரதமர் மீது அவர் கூறும் எந்தக் குற்றச்சாட்டும் சரியானது அல்ல. அவரிடம் அதற்கு ஆதாரங்களும் கிடையாது. உச்ச நீதிமன்றம் அப்படி எந்தக் குற்றச்சாட்டையும் மோடி மீது உறுதி செய்யாத நிலையில், பிரதமருக்கு எதிராக பல்வேறு அவதூறான, பொய்யான பிரசாரத்தை ராகுல் முன்னெடுத்துள்ளார்.

இது தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும். தேர்தல் நேரத்தில் வாக்குகளைக் கவர வேண்டும் என்பதற்காக பிரதமர் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை வேண்டும் என்றே ராகுல் தெரிவித்து வருகிறார்.

அதனால், தேர்தல் விதிகளை மீறும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனு அளித்துள்ளோம். ராகுல் காந்தி மீது இதுவரை 3 முறை நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளோம் என்றார்.

.