বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Oct 22, 2019

Exit Polls - ‘மகாராஷ்டிரா, அரியானாவில் பாஜக ஆட்சி..!’- கருத்துக் கணிப்பில் தகவல்!

Poll Of Polls: மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தது.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

மகாராஷ்டிரா (Maharashtra) மற்றும் அரியானா (Haryana) மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், இரண்டு மாநிலங்களிலும் பாஜக-வே (BJP) மீண்டும் ஆட்சியமைக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் (exit polls) தெரிவித்துள்ளன. 

மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தல் களத்தில் நின்றது. நியூஸ் 24 - டைம்ஸ் நவ் நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில், மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி, 230-ஐ வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு வெறும் 48 இடங்கள் மட்டுமே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில், ஆளுங்கூட்டணிக்கு 166 முதல் 194 இடங்கள் கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கூட்டணிக்கு 72 முதல் 90 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

அரியானாவைப் பொறுத்தவரை, பாஜக, மொத்தம் இருக்கும் 90 இடங்களில் 66-ஐக் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ், 14 இடங்களை மட்டுமே வெல்லும் என்றும் கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன.

எச்சரிக்கை - கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் தவறாகத்தான் இருக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக, நாடாளுமன்றத் தேர்தலை மிகப் பெரும் பெரும்பான்மையுடன் வென்றதைத் தொடர்ந்து வரும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மூ காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து செய்யப்பட்டதை முன் வைத்தே பாஜக, தனது தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்தது. கருத்துக் கணிப்புகள் உண்மையாகும் பட்சத்தில், தனது காஷ்மீர் முடிவை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்றே பாஜக எடுத்துக் கொள்ளும். 

Advertisement

எதிர்க்கட்சிகள், பொருளாதார மந்தநிலை, விவசாயிகள் தற்கொலை, விவசாயப் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை குறித்து எடுத்துக்கூறியே தேர்தலை சந்தித்தன. 

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், வரலாற்றுத் தோல்வியை சந்தித்த பிறகு, அக்கட்சியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக அக்கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, பொறுப்பை விட்டு விலகியதைத் தொடர்ந்து அக்கட்சி சரிவர செயல்படவில்லை. இரு மாநிலத் தேர்தல்களிலும் ராகுல் காந்தி மட்டும்தான் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். மற்றபடி எந்த காங்கிரஸ் தலைவர்களும் பெரிதாக பொதுக் கூட்டங்களுக்கு வரவில்லை. 
 

Advertisement