This Article is From Mar 12, 2019

பொள்ளாச்சி விவகாரம்: ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று! - தமிழிசை வேதனை

பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் சரியான விசாரணை நடத்தி குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் என்று பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி விவகாரம்: ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று! - தமிழிசை வேதனை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். இந்த இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவங்களை வீடியோவும் எடுத்து உள்ளனர்.

இதில் சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவையில் இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு குறித்து கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் விளக்கம் அளித்தார். அப்போது, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவிகள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தனது டிவிட்டர் பதிவில், பொள்ளாச்சியில் நடைபெற்றதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. பெண்ணினம் கசக்கப்படுவதையும்.. நசுக்கப்படுவதையும்..துளியும், ஏற்றுக்கொள்ள முடியாது.

பாதிக்கப்பட்ட பெண்கள் பாதுகாக்கப்படவேண்டும் சரியான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்,சிறப்பு புலனாய்வு வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 

மேலும் படிக்க: பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டம்!

.