This Article is From Apr 12, 2019

ஆந்திராவில் நள்ளிரவு வரை நீடித்த வாக்குப்பதிவு!

மக்களவைத் தேர்தல் 2019: குண்டூர், கிருஷ்ணா, நெல்லூர் மற்றும் கர்னூல் உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்றவர்களை, நள்ளிரவு வரை வாக்களிக்க மாவட்ட அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

ஆந்திராவில் நள்ளிரவு வரை நீடித்த வாக்குப்பதிவு!

மோதல் காரணமாகவும், எந்திர கோளாறு காரணமாகவும் வாக்குப்பதிவு தாமதமானது.

Amaravati:

வரலாறு காணாத வகையில், ஆந்திராவில் நேற்று நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நிகழ்ந்துள்ளது. ஆந்திராவில் நேற்று வாக்குச்சாவடியில் நடந்த மோதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

எனினும், வாக்குப்பதிவு நிறுத்தப்படாமல், தொடர்ந்து நடத்தப்பட்டது. இதில், 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா, நெல்லூர் மற்றும் கர்னூல் உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்றவர்களை, நள்ளிரவு வரை வாக்களிக்க மாவட்ட அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

மின்னணு வாக்கு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு, வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட மோதல்கள் உள்ளிட்ட காரணங்களால் மாநிலத்தில் உள்ள 400க்கும் அதிகமான வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு தாமதமானது.

இதனிடையே, முறையான ஏற்பாடுகள் செய்வதில் தேர்தல் அதிகாரிகளின் தோல்வியடைந்துவிட்டதாக கூறி அவர்களுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராக களமிறக்கப்பட்ட, முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதேபோல், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் போராட்டத்தில் ஈடுபட்டது.

விஜயவாடாவில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு பெரும் பதற்றம் நிலவியது. 25 வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்த நேரத்தையும் கடந்து சுமார் 400 வாக்குச்சாவடிகளில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

.