Read in English
This Article is From Dec 11, 2018

சட்டமன்ற தேர்தலில் பின்னடைவுக்கான காரணம் என்ன? ராஜ்நாத் சிங்கின் அடேடே விளக்கம்!

காங்கிரஸ் கட்சி, தெலங்கானா மாநிலத்தில் தனது ஆதிக்கத்தை ஏன் செலுத்த முடியவில்லை? என ராஜ்நாத் சிங் கேள்வி?

Advertisement
இந்தியா
New Delhi:

நடந்த சட்டமன்ற தேர்தில் முடிவுகளில் பாஜக-வினர் மிக மோசமான பின்னடைவு சந்தித்த நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங்கிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘இன்றை சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மாநில அரசின் செயல்பாடுகள் பொருத்ததே, அதற்க்கும் மத்தியில் இருக்கும் ஆட்சிக்கும் தொடர்பில்லை. மேலும் காங்கிரஸ் கட்சி, தெலங்கானா மாநிலத்தில் தனது ஆதிக்கத்தை ஏன் செலுத்த முடியவில்லை? என கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்திற்க்கு வெளியே நிருபர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங் வெற்றி பெற்ற எல்லா வேட்பாளர்களுக்கும், கட்சிகளுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தகவல்கள் படி சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் கடும் போட்டி நிலவி வருகின்ற நிலையில் மிசோரமில் உள்ள மிசோ நெஷ்னல் கட்சியிடம் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது.

Advertisement
Advertisement