This Article is From Dec 01, 2018

‘டெல்லியில் போராடிய முறை மன்னிக்க முடியாத குற்றம்!’- பொன்னார் கொதிப்பு

விவசாயக் கடன் தள்ளுபடி, விளை பொருட்களுக்கு சரியான விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, தலைநகர் டெல்லியில் ஏராளமான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

‘டெல்லியில் போராடிய முறை மன்னிக்க முடியாத குற்றம்!’- பொன்னார் கொதிப்பு

விவசாயக் கடன் தள்ளுபடி, விளை பொருட்களுக்கு சரியான விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, தலைநகர் டெல்லியில் ஏராளமான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளும், மற்ற மாநில விவசாயிகளுடன் இந்தப் போராட்டத்தில் கை கோர்த்துள்ளனர். இந்நிலையில், ‘நாடாளுமன்றத்திற்குள் எங்களை விடவில்லை என்றால், நாங்கள் நிர்வாணமாக போராட்டம் நடத்துவோம்' என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், ‘நாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கான ஆதார விலையைத் தான் கேட்கிறோம். இது குறித்து மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழக விவசாயிகளான நாங்கள் நிர்வாணமாக போராடத் தயாராக உள்ளோம்' என்று கொதிக்கிறார்.

இது குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தள்ளி, நாட்டில் உள்ள தலைநகருக்குப் போய், பல்வேறு மாநிலங்களின் விவசாயிகளுக்கு மத்தியில், தமிழக விவசாயிகள், தமிழக மக்கள் ஆகியோருடைய மானத்தை வாங்கக் கூடிய வகையில் மிகக் கொச்சையான முறையில் சிலர் நடந்திருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம். தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளனர்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

.