This Article is From Jan 14, 2019

Pongal Festival 2019: திருவிழாக்களின் திருவிழா: தமிழர்களின் தனித்துவ அடையாளம் “தைப் பொங்கல்”..!

Pongal in 2019: உலகில் மொத்தம் உள்ள 235 நாடுகளில் சுமார் 144 நாடுகளில் தமிழர்கள் வசித்து வருகின்றனர்

Pongal Festival 2019: திருவிழாக்களின் திருவிழா: தமிழர்களின் தனித்துவ அடையாளம் “தைப் பொங்கல்”..!

pongal 2019: உலகம் முழுவதும் 144 நாடுகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகத்துடன்கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று போகிப்பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், அடுத்தடுத்துஇன்னும் 3 பண்டிகைகளும் குறிப்பாக ஜல்லிக்கட்டுப் போட்டிகளும் தமிழர்களுக்கு உற்சாகம் அளிக்ககாத்திருக்கின்றன.

உலகில் மொத்தம் உள்ள 235 நாடுகளில் சுமார் 144 நாடுகளில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவற்றில் லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் நாடுகள் 20-யைத் தாண்டுகின்றன. தமிழ்நாட்டைதவிர்த்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக இருந்துவருகிறது. தமிழர்களுக்குள் சாதி, மத அடிப்படையில் பிரிவுகள் காணப்பட்டாலும், அவர்களைஒன்றிணைக்கும் பேராயுதமாக தமிழும், தைப் பொங்கல் திருநாளும் உள்ளன.

கிருத்துவர்கள்தேவாலயங்களில் கரும்புடன் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். தமிழ் முஸ்லிம்களில் பலகுடும்பங்களில் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கலுடன் சிறப்பு விருந்து அமைப்பதும் வழக்கமாகஇருந்து வருகிறது.

இதனை தவிர்த்து நல்லிணக்கத்தை பேணும் வகையில் அனைத்து மதத்தவரும் ஒன்றுகூடிசமத்துவப் பொங்கலை கொண்டாடி மகிழ்கின்றனர். அந்த வகையில் தமிழர்களை கட்டி இணைக்கும்ஒற்றுமைக் கயிறாக இருக்கிறது தைப் பொங்கல்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் இயற்கை பேரிடர் மூலமாகவோ அல்லதுவேறு வழியிலோ துயரங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த காயங்களுக்கு மருந்திட்டுபுதுப் பாய்ச்சலுக்கு தயார்படுத்தும் சக்தியாக தைத்திருநாள் ஒவ்வோராண்டும் திகழும்.

அணிவது வேட்டி சட்டை, பேசுவது தமிழ் என்பதைப் போல தமிழர்களின் தனித்துவ அடையாளமாக, கொண்டாட்டமாக தைப் பொங்கல் விளங்குகிறது. கொண்டாட்ட நிகழ்ச்சிகள் 4 நாட்களுக்குநடைபெறுகின்றன.

போகிப் பண்டிகை: மார்கழி மாதத்தின் இறுதி நாளையே போகியாக தமிழர்கள் கொண்டாடிவருகின்றனர். ஆங்கில நாட்காட்டியின்படி ஜனவரி 14-ம்தேதியான இன்று போகிகொண்டாடப்படுகிறது. 'பழையன கழித்து புதியன புகவிடும்' நாளாக போகி கருதப்படுகிறது.

அடைந்த துயரங்கள், காயங்களை 'போக்கி (நீக்கி)' விடும் நாள் என்று பொருள் கொள்ளும் வகையில்போகியை தமிழர்கள் கொண்டாடுகின்றனர். இந்நாளில் வீட்டில் உள்ள உதவாத பழைய பொருட்கள்நீக்கப்பட்டு, புதிய பொருட்கள் வீட்டை அலங்கரிக்கும். பொருள் அளவில் மட்டுமல்லாமல்மனதளவிலும் உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகளையும் போக்கி விட வேண்டும் என்றும் இந்தபோகி நம்மை வலியுறுத்துகிறது.

தைப் பொங்கல்: புதுப்பானையில் மஞ்சளை கட்டி, புத்தரிசி வெல்லமிட்டு தமிழர்கள்பொங்கலிடுவார்கள். இந்த பண்டிகைக்காக தயாராவது சுவாரசியமாக இருக்கும். பண்டிகைக்குதேவையான புதுப்பானை, கரும்பு, வெல்லம், மாயிலை உள்ளிட்டவை வாங்குவதில்உணர்வுபூர்வமான மகிழ்ச்சியை தமிழர்கள் உணர்வார்கள். தை முதல் நாளன்று இந்த பண்டிகைகொண்டாடப்படுகிறது.

மாட்டுப் பொங்கல்: உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்து மக்கள் உணவு உண்ண உதவியாய்இருந்தவை மாடுகள். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் மாட்டை அலங்கரித்து கொம்புகளை சீவி அதற்கு வண்ணம் பூசி விடுவார்கள். தாம்பளத் தட்டுகளில் தாங்கள் விளைவித்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச்சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். இதன் பின் பசு, காளை, எருமை எனஅனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

காணும் பொங்கல்: உற்றார் உறவினர்களை நேரில் சென்று பார்ப்பது, பெரியோரிடம் ஆசி பெறுதல்உள்ளிட்டவை காணும் பொங்கலின்போது நடைபெறும். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றுகூடிமகிழ்வது காணும் பொங்கலின் அடிப்படையாகும். இதனைத் தவிர்த்து கிராமங்களில் உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், கபடி போன்ற வீர விளையாட்டுகள் இந்த நாளில் நடைபெறும்.

.