2019-ம் ஆண்டு பொங்கல் போனஸ் வழங்கப்படுவது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழக அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான தொகை, போனசாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதன்படி, காலமுறை சம்பளம் பெறும் சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்கள், உள்ளாட்சி மன்றம், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன பணியாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் ஏ மற்றும் பி பிரிவில் உள்ள அரசு ஊழியர்களுக்கு போனஸ் விதிமுறை பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணியாற்றுபவர்கள், ஒப்பந்த பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணிபுரிபவர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.1,000 போனஸ் வழங்கப்படும் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.500 வழங்கப்படும் என்றும் ஓய்வூபெற்றிருந்தாலும், மரணம் அடைந்தாலும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.