This Article is From Jan 18, 2019

பொங்கல் ரேஸில் பேட்ட, விஸ்வாசத்தை பின்னுக்கு தள்ளிய வசூல் மன்னன்

பேட்ட தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடியையும், விஸ்வாசம் ரூ. 125 கோடியையும் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன

பொங்கல் ரேஸில் பேட்ட, விஸ்வாசத்தை பின்னுக்கு தள்ளிய வசூல் மன்னன்

பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான பேட்ட, விஸ்வாசம் படங்களை விடவும் டாஸ்மாக் அதிகளவு வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த்தின் பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசமும் கடந்த 10-ம் தேதி வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

வசூல் என்கிற ரீதியில் இரு படங்களுக்கும் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. தமிழ்நாட்டில் நேற்று வரையில் பேட்ட ரூ. 100 கோடி வசூல் செய்திருப்பதாக சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

இதேபோன்று விஸ்வாசம் தமிழகத்தில் மட்டும் ரூ. 125 கோடியை வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் பேட்டயை விஸ்வாசம் முந்தினாலும், தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற இடங்களில் பேட்ட நல்ல வசூல் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே பொங்கல் பண்டிகையை மதுபான பிரியர்கள் உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தாண்டில் அவர்களது கொண்டாட்டம் சற்று தூக்கலாகவே இருந்துள்ளது. பொங்கல் பண்டிகை விடுமுறையில் மட்டும் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொங்கல் ரேஸில் வசூல் மன்னன் யார் என்று ரஜினி, அஜித் ரசிர்கள் இடையே ட்விட்டர் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், சைலன்ட்டாக கலெக்ஷனை அள்ளியுள்ளது டாஸ்மாக்.

.