This Article is From Sep 12, 2019

Ticket Reservation: பொங்கல் பண்டிக்கைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு: தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது!

Ticket Reservation: ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் பயணத்திற்கான முன்பதிவு இன்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தென்மாவட்டங்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் நிறைவடைந்தது. 

Advertisement
தமிழ்நாடு Edited by

Train ticket: தமிழர் திருநாளான தை பொங்கல் அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவுகள், தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிறைவு பெற்றது.

பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ஜனவரி 10-ம் தேதி பயணம் செய்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. 

தமிழர் திருநாளான தை பொங்கல் அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்காக வெளியூர்களில் பணி புரியும் லட்ச கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம். இதனால் சென்னை பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழியும்.

மேலும், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு விடுமுறை என்பதால் டிக்கெட் முன்பதிவு செய்ய மக்கள் ஆர்வத்துடன் இருந்தனர். இந்நிலையில், ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் பயணத்திற்கான முன்பதிவு இன்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தென்மாவட்டங்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் நிறைவடைந்தது. 

Advertisement

பாண்டியன், வைகை, முத்துநகர், பொதிகை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட விரைவு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு அனைத்தும் முடிந்தது. தென் மாவட்டங்களுக்கு ரயில்களில் பயணம் செய்யும் 85% மக்கள் ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ததால், ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஜனவரி 11ஆம் தேதிக்கான முன்பதிவு நாளையும், ஜனவரி 12ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை மறுநாளும் தொடங்குகிறது. ஜனவரி 13ஆம் தேதிக்கான முன்பதிவு 15ஆம் தேதியும், 14ஆம் தேதிக்கான முன்பதிவு 16ஆம் தேதியும் தொடங்குகிறது

Advertisement

தொடர்ந்து, பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப வசதியாக ஜனவரி 19ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 20ஆம் தேதிக்கான முன்பதிவு வரும் 22ஆம் தேதியும் தொடங்கும்.

Advertisement