This Article is From Jan 16, 2020

Jallikattu: 700 காளைகளுடன் களைகட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு!!

Jallikattu: ஜனவரி 31 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. 

Jallikattu: 700 காளைகளுடன் களைகட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு!!

Jallikattu: நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கோலகலமாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று பாலமேட்டிலும் நாளை அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடக்க இருக்கிறது.

Jallikattu: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு களைகட்டியது. சுமார் 700 காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்கித் தங்களது வீரத்தை வெளிக்காட்டினர் மாடுபிடி வீரர்கள். 

முன்னதாக ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ப்பட்டிருந்தது. அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மாவட்ட நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று மட்டும் உத்தரவிட்டது. 

நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கோலகலமாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று பாலமேட்டிலும் நாளை அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடக்க இருக்கிறது. இந்தப் போட்டிகளில் 21 வயதுக்குக் குறைவான நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

ஜனவரி 31 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. 

முன்னதாக விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தன. அதைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம். அந்த வழக்கில் தமிழக அரசு, ஜல்லிக்கட்டு என்பது மாநிலத்தின் கலாசாரம் மற்றும் அடையாளம் என்று வாதம் வைத்தது. 

இதைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன்னெழுச்சியாக போராட்டங்கள் வெடித்தன. பின்னர் பிறப்பிக்கப்பட்ட சிறப்பு சட்டம் மூலம் மீண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.


 

.