"பாலியல் குற்றங்கள் எல்லா இடத்திலும் நடக்கிறது. இதற்காக சிலரை சஸ்பெண்ட் செய்துள்ளோம்" போப் ப்ரான்சிஸ்
ஹைலைட்ஸ்
- "சில பிஷப்புகள், மத போதகர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுப்பட்டுள்ளனர்"
- "இதனை முழுமையாக தடுக்க வாடிகன் நடவடிக்கை எடுத்து வருகிறது"
- கன்னியாஸ்திரி ஒருவர் கேரளாவில் உள்ள பிஷப் மீது குற்றம்சாட்டினார்
போப் ப்ரான்சிஸ் செவ்வாயன்று பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது சில பிஷப்புகள் மற்றும் மத போதகர்கள் இங்குள்ள கன்னியாஸ்திகளிடம் தவறாக நடந்துள்ளதாக கூறினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து திரும்பும் போது இதனை தெரிவித்தார்.
வாடிகனில் வெளியாகும் பத்திரிக்கையில் கன்னியாஸ்திகளுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து எழுதப்பட்டிருந்தது. அதில் அவர்கள் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய சொல்லியிருப்பதாகவும், இதற்கு காரணம் அங்குள்ள மத போதகர்கள் தான் என்றும் கூறிப்பட்டுள்ளது.
கடந்த வருடம் கன்னியாஸ்திரி ஒருவர் கேரளாவில் உள்ள பிஷப் ஒருவர் தன்னொடு பாலியல் ரீதியான உறவு கொண்ட செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
"பாலியல் குற்றங்கள் எல்லா இடத்திலும் நடக்கிறது. இதற்காக சிலரை சஸ்பெண்ட் செய்துள்ளோம். இதனை முழுமையாக தடுக்க வாடிகன் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக நிறைய செயல்முறை நடவடிகைகளை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது ஒரு கலாச்சார பிரச்சனை இதற்கு காரணம் பெண்களை தரக்குறைவாகவும், இரண்டாம்பட்சமாகவும் பார்ப்பதுதான் என்றார்.
பெண்கள் சர்ச் உலகம் என்ற பெயரில் வெளியாகும் வாடிகன் பத்திரிக்கையில் பல ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதாக கூறப்பட்டிருந்தது. ஒரு கன்னியாஸ்திரி கடந்த ஜூன்மாதம் கொடுத்த வழக்கை போலீஸ் செப்டம்பரில் விசாரிக்க துவங்கியுள்ளது. அடுத்ததாக 5 கன்னியாஸ்திரிகள் வழக்கு தொடர பலரது ஆதரவு கிடைத்தது. இது வாடிகனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.