This Article is From Aug 15, 2020

அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ் என போஸ்டர்; பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள்!

தேனியில் அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டதன் காரணமாக, சென்னையில் உள்ள துனை முதல்வர் ஓ.பி.எஸ் இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் இன்று ஆலோசனையில் ஈடுபடுவதற்காக சென்றுள்ளனர். 

Advertisement
தமிழ்நாடு Written by

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என தேனி மாவட்டத்தில் நேற்று இரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 74வது சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய நிலையில் துனை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான தேனியில் அடுத்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இதில் அம்மாவின் ஆசி பெற்ற ஒரே முதல்வர் போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

கடந்த சில நாட்களாக அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்து பல முரண்பட்ட கருத்துக்களை அதிமுக அமைச்சர்கள் தெரிவித்து வந்திருந்தனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “எடப்பாடியார்தான் என்றும் முதல்வர்” என டிவிட் செய்திருந்தார். அதே நேரத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமைதான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யும் என்று கூறியிருந்தார். இப்படியான தொடர் முரண்பட்ட கருத்துக்கள் காரணமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்ட முடிவில், “உரிய நேரத்தில் ஆலோசித்து தலைமை கழகம் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்.” என அதிமுக துனை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தேனியில் அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டதன் காரணமாக, சென்னையில் உள்ள துனை முதல்வர் ஓ.பி.எஸ் இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் இன்று ஆலோசனையில் ஈடுபடுவதற்காக சென்றுள்ளனர். 

Advertisement
Advertisement