மும்பையில் இன்று மாலை உத்தவ் தாக்கரே பதவியேற்கு உள்ள நிலையில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
Pune: புனேவில் அஜித்பவாரின் சொந்த தொகுதியான பாராமதியில் ‘அஜித்பவாரே மகாராஷ்டிராவின் வருங்கால முதல்வர்' என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் 'மகாராஷ்டிரா விகாஸ் அகாதி' கூட்டணி அமைவதற்கு முக்கிய காரணமான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் மற்றும் அஜித்பவார் படங்கள் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன.
மேலும், மும்பையில் இன்று மாலை உத்தவ் தாக்கரே பதவியேற்கு உள்ள நிலையில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நீங்களே. இந்த மாநிலத்திற்கு தற்போது நீங்களே தேவை, நீங்களை அதனை தடுக்கக்கூடாது என்று அந்த போஸ்டரில் மராத்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஒட்டுமொத்த மகாராஷ்டிராவே உங்களை வருங்கால முதல்வராக பார்க்கிறது. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் முடிவு செய்வோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, உத்தவ் தாக்கரே பதவியேற்பின் போது, அஜித் தாக்கரே துணை முதல்வராக பதவியேற்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் அஜித்பவார், யாரும் எதிர்பாராத அரசியல் தருப்பமாக பாஜகவுடன் ரகசிய கூட்டணி அமைத்து தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வர் பதியேற்றபோது, அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.
இதைத்தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.