This Article is From Mar 21, 2020

ரயில் பயணிகள் 12 பேருக்கு கொரோனா!! பயணங்களை ஒத்திவைக்க ரயில்வே வலியுறுத்தல்!

கடந்த சனிக்கிழமையன்று பெங்களூரு - ராஜதானி ரயிலில் பயணம் செய்த ஒருவரது கையில், கொரோனா அறிகுறிகளுடன் தனிமையில் உள்ளார் என்ற சீல் குத்தப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த சக பயணிகள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவரும் அவரது மனைவியும் ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ரயில் பயணிகள் 12 பேருக்கு கொரோனா!! பயணங்களை ஒத்திவைக்க ரயில்வே வலியுறுத்தல்!

இந்தியாவில் 271 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

New Delhi:

நாட்டில் ரயில்களில் பயணம் செய்த 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் தங்களது பயணங்களை ஒத்தி வைக்குமாறு ரயில்வே வலியுறுத்தியுள்ளது. 

மார்ச் 13 முதல் 16 வரையில் ரயிலில் பயணம் செய்த 12 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.

ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'ரயிலில் பயணம் செய்த பயணிகள் சிலரை கொரோனா பாதித்துள்ளது. இதனால் ரயில் பயணம் ஆபத்தாக மாறியுள்ளது. எனவே, சக பயணிகளுக்கு பாதிப்பு இருந்தால் அது உங்களையும் தாக்கக் கூடும். இதனால் மக்கள் தங்களுடைய பயணத்தையும், தங்களது அன்புக்குரியவர்களின் பயணத்தையும தள்ளி வைக்கும்டி கேட்டுக் கொள்கிறோம்' என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த சூழலில் இப்படியொரு கோரிக்கையை மக்களிடம் வைத்துள்ளது ரயில்வே அமைச்சகம். 

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனாவால் 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பஸ், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் என்று மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே கேட்டுக் கொண்டுள்ளார். 

மும்பை - புனே பகுதியில் இருந்து பீகாருக்கு வரும் அனைத்து ரயில் பயணிகளையும் சோதனை செய்ய ஏற்பாடுகள் செய்து தருமாறு, பீகார் அரசை கிழக்கு மத்திய ரயில்வே கோரியுள்ளது.

நாடு முழுவதும் நாளை ரயில்கள் இயக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்கள் சுய ஊரடங்கை நடத்துவதற்காக இந்த அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த சனிக்கிழமையன்று பெங்களூரு - ராஜதானி ரயிலில் பயணம் செய்த ஒருவரது கையில், கொரோனா அறிகுறிகளுடன் தனிமையில் உள்ளார் என்ற சீல் குத்தப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த சக பயணிகள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து கணவன் - மனைவி ஆகியோர் ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

மார்ச் 13-ம்தேதி ஆந்திராவின் சம்பர்க் கிராந்தி ரயிலில் சென்ற 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 

.