ஸ்ரீநகர் ஏர்போர்ட்டில் பனிப்பொழிவினால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Srinagar: காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடுமையான பனிபொழிவால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார சேவையை மீண்டும் கொடுக்க முயற்சித்தும் முடியாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், பல மருத்துவமனைகள் மின்சாரம் இல்லாமல் இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மெழுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கவேண்டிய இருப்பதால் காஷ்மீர் பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
முக்கியமான சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலை தடை செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவினால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை விமான நிலையம் வெளியிட்டுள்ளது.
ஆப்பிள் தோட்டங்கள் பனிப்பொழிவினால் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் நஷ்டமைந்துள்ளனர்.
முகல் ரோட்டில் ஏற்பட்ட பனிப்பொழிவில் சிக்கிய 120 பேரை மீட்புக் குழுவினர் மீட்டனர். அதில் பெரும்பாலானவர்கள் லாரி ஓட்டுநர்கள். காஷ்மீர் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில், காஷ்மீரில் இன்றிலிருந்து வானிலை முன்னேற்றமடையும் என்று கூறப்பட்டுள்ளது.