This Article is From Sep 20, 2019

தோனியின் சொந்த ஊரில் தினமும் பவர் கட்- நடவடிக்கை எடுக்க மனைவி சாக்ஷி ட்விட்டரில் வலியுறுத்தல்

எந்த காரணத்திற்காக மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என்று தெரியவில்லை என்று தோனியின் மனைவி சாக்ஷி கூறியுள்ளார். பண்டிகை நாட்கள் தற்போது இல்லாதது ஒரு ஆறுதல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தோனியின் சொந்த ஊரில் தினமும் பவர் கட்- நடவடிக்கை எடுக்க மனைவி சாக்ஷி ட்விட்டரில் வலியுறுத்தல்

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிதான் தோனியின் சொந்த ஊர்.

கிரிக்கெட் வீரர் தோனியின் சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தினசரி மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதாக அவரது மனைவி சாக்ஷி சிங் ராவத் ஆதங்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். 

தோனியின் மனைவி சாக்ஷி, தனது கணவரின் சொந்த ஊரான ராஞ்சியில் வசித்து வருகிறார். அங்கு அடிக்கடி பவர் கட் ஆகி வரும் நிலையில், அந்த பிரச்னையை சாக்ஷி ட்விட்டரில் எழுப்பியுள்ளார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 
 

சாக்ஷியின் ட்விட் லைக்குகளை ஆயிக்கணக்கில் குவித்து வருகிறது. அவரை ஃபாலோ செய்வோர், ட்விட்டை ஜார்க்கண்ட் முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு டேக் செய்துள்ளனர். 
.

சாக்ஷி தனது ட்விட்டர் பதிவில், ' ராஞ்சியில் உள்ள மக்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் மின்சார துண்டிப்பை அனுபவித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் 4 முதல் 7 மணி நேரத்திற்கு மின்சாரம் இங்கு துண்டிக்கப்படுகிறது. இன்றைக்கு மட்டும் கடந்த 5 மணி நேரமாக மின்சாரம் இங்கு இல்லை. மின் துண்டிப்புக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. பண்டிகை நாட்கள் தற்போது இல்லாமல் இருப்பது ஒரு ஆறுதலான விஷயம்' என்று குறிப்பிட்டுள்ளார். 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. இங்கு முதல்வராக உள்ள ரகுபர் தாஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் 2019-க்குள் மின் மிகை மாநிலமாக ஜார்க்கண்ட் மாறும் என்று உறுதி அளித்திருந்தார். 

.