'பயங்கரவாதி' என்று என்.எஸ்.யு.ஐ உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர் (File)
Bhopal: பிரதமர் நரேந்திர மோடியின் வீழ்ச்சிக்கு பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூரே காரணம் என்று மத்திய பிரதேச அமைச்சர் சஜ்ஜன் சிங் வர்மா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர்க் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் போபாலில் உள்ள மோபன்லால் சதுர்வேதி பல்கலைக்கழத்திலிருந்து எம்.பிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதை அடுத்து சஜ்ஜன் சிங் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
சிறுமிகள் பிரக்யா தாகூர் அவர்களைப் பார்த்ததும் பயங்கரவாதியை வெளியே அனுப்புங்கள் என்று கோஷமிட்டதை நான் அறிந்தேன். பிரக்யா சிங் விமானத்தில் அல்லது ரயில், சாலை எங்கு பயணித்தாலும் அவருக்கு எதிரான கோஷங்களை பார்க்க முடிகிறது. அவர் ஜனாதிபதியை விட மேலானவர் என்பது போல் நடந்து கொள்கிறார். நரேந்திர மோடியின் வீழ்ச்சிக்கு காரணமாக இருப்பார் என்று செய்தி முகமையான ஏ.என்.ஐயிடம் தெரிவித்தார்.
டெல்லியிலிருந்து போபால் செல்லும் தனியார் விமானத்தில் ஏறிய பிரக்யா தாகூர், தான் முன்பதிவு செய்த இருக்கை தனக்கு வழங்கப்படவில்லை என விமான ஊழியர்கள் மற்றும் சக பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை மற்றும் முதல் வகுப்பு வசதி ஆகியவை தரப்படவில்லை என அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பயணிகளும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்த வீடியோவில், "நீங்கள் மக்கள் பிரதிநிதி. உங்கள் பணி எங்களைத் தொந்தரவு செய்வதில்லை. உங்களுக்கு அசவுகரியமாக இருந்தால் அடுத்த விமானத்தில் வாருங்கள்" என்று ஒரு பயணி கூறுகிறார். மற்றொரு பயணி, "முதல் வகுப்பு உங்கள் உரிமை இல்லை. இங்குள்ள ஒரு பயணி தொந்தரவுக்கு உள்ளானாலும் அதற்கு நீங்களே பொறுப்பு. 50 பயணிகளின் நேரத்தை நீங்கள் வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள். இது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? " என கேட்டார்.
பல்கலைக்கழகத்தில் வருகைபதிவேடு பிரச்சினை குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைச் சந்திக்கச் சென்றார் பிரக்யா தாகூர். மாணவர்கள் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
"நான் ஒரு 'பயங்கரவாதி' என்று என்.எஸ்.யு.ஐ உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த முழக்கங்கள் சட்டவிரோதமானவை, இழிவானவை. அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஒருவரை துஷ்பிரயோகம் செய்வது மற்றும் ஒரு பெண் சன்யாசி (துறவியை) அவமதிப்பது தேச விரோதமானது. இது குறித்து நான் நிச்சயமாக செயல்படுவேன். அராஜக கூறுகள் மீது நாம் கருணை காட்ட முடியாது, இல்லையெனில் அவை எண்ணிக்கையில் வளரும். அவர்களுக்கு எதிரான நடவடிக்கை அவசியம்," என்று அவர் கூறினார்.