ப.சிதம்பரத்திடமிருந்து ராகுல் காந்தி, பாடம் கற்க வேண்டும்: பிரகாஷ் ஜவடேகர்
ஹைலைட்ஸ்
- ப.சிதம்பரத்திடமிருந்து ராகுல் காந்தி, பாடம் கற்க வேண்டும்
- இதை பற்றியெல்லாம் ராகுல் காந்திக்கு எப்படி தெரியும்
- குற்றச்சாட்டுகள் மூலம் மக்கள் தவறாக வழி நடத்தப்படுகின்றனர்.
New Delhi: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திடமிருந்து ராகுல் காந்தி, பாடம் கற்க வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் முதல் 50 பேரின் பட்டியலை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிலையில், மத்திய அரசு அந்த பட்டியலை நாடாளுமன்றத்தில் தெரிவிக்காமல் மறைத்துவிட்டது. எனெனில், அந்த பட்டியலில் ஆளும் கட்சியினரின் நண்பர்களும் உள்ளனர் என ராகுல் காந்தி பாஜகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
முன்னதாக, நேற்றைய தினம் வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் முதல் 50 நபரின் பட்டியலை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில், நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, விஜய் மல்லையா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. மேலும், இந்த 50 நிறுவனங்கள் திரும்பி செலுத்த வேண்டிய ரூ.68 ஆயிரம் கோடி கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்யப்பட்டதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, கடன் தள்ளுபடி என்பது வேறு, வாரக் கடனை கழித்து விட்டு கணக்கு வைத்திருப்பது என்பது வேறு. இது வங்கிகளின் வழக்கமான நடைமுறை. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வந்து சேராத கடன்களை கணக்குபடி தனித்து வைப்பது என்பது வங்கி நடைமுறை. இதை பற்றியெல்லாம் ராகுல் காந்திக்கு எப்படி தெரியும். முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரத்திடம் ராகுல் காந்தி டியூஷன் கற்க வேண்டும்'' எனக் கூறினார்.
இது நடைமுறைகளின் படி கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்வதுதானே தவிர இது அவர்களிடமிருந்து கடனை வசூலிக்கும் நடைமுறையை கைவிடுவதாக அர்த்தமாகாது.
மத்திய அரசை விமர்சித்த ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, நான் 50 வங்கி மோசடியாளர்கள் பெயர்களை தெரிவியுங்கள் என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். ஆனால் அதற்கு நிதியமைச்சர் பதிலளிக்க மறுத்துவிட்டார். தற்போது ஆர்பிஐ வெளியிட்ட பட்டியலில் நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, மற்றும் பிற பாஜக நண்பர்கள் உள்ளனர், இதனால்தான் நாடாளுமன்றத்தில் உண்மையை மறைக்கின்றனர்” என்று அவர் சாடியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர் ட்விட்டுகள் மூலம் ராகுலுக்கு பதிலளித்துள்ளார். அதில், அந்த குற்றச்சாட்டுகள் மூலம் மக்கள் தவறாக வழி நடத்தப்படுகின்றனர். அத்தோடு, இந்த தரவுகளை பரபரப்பாக்கி வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.