This Article is From Aug 14, 2020

பிரணாப் முகர்ஜி உடல் நிலை சீராக உள்ளது; தந்தை குறித்து மகன் அபிஜித் முகர்ஜி உருக்கம்!

பிரணாப் முகர்ஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும், செயற்கை சுவாச கருவியுடன் உடல் நிலை சீராக உள்ளதாகவும் ராணுவ மருத்துவமனை தற்போது தெரிவித்துள்ளது.

பிரணாப் முகர்ஜி உடல் நிலை சீராக உள்ளது; தந்தை குறித்து மகன் அபிஜித் முகர்ஜி உருக்கம்!

பிரணாப் முகர்ஜி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வென்டிலேட்டர் ஆதரவில் உள்ளார்.

ஹைலைட்ஸ்

  • பிரணாப் முகர்ஜி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பு
  • 96 மணி நேர தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
  • அபிஜித் முகர்ஜி தனது தனது தந்தை குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 25 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், 84 வயதான முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மூளை அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் நலத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லையென சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனை தெரிவித்திருந்த நிலையில், 96 மணி நேர தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்றுடன் 96 மணி நேர தீவிர கண்காணிப்பு இன்றுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, “96 மணிநேர தொடர் மருத்துவ கண்காணிப்பு காலம் இன்றுடன் முடிவடைந்துள்ளது. உடல் நிலை சீராக உள்ளது. என் தந்தை எப்போதும் சொன்வார், 'நான் திருப்பித் தரக்கூடியதை விட இந்திய மக்களிடமிருந்து எனக்கு அதிகம் கிடைத்தது.' என. ஆகவே தயவுசெய்து அவருக்காக ஜெபியுங்கள்” என்று அபிஜித் முகர்ஜி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரணாப் முகர்ஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும், செயற்கை சுவாச கருவியுடன் உடல் நிலை சீராக உள்ளதாகவும் ராணுவ மருத்துவமனை தற்போது தெரிவித்துள்ளது.

பிரணாப் முகர்ஜி திங்களன்று தனது அறுவை சிகிச்சைக்கு முன்னர் கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்ததாக ட்வீட் செய்திருந்தார்.

"ஒரு தனி நடைமுறைக்காக மருத்துவமனைக்கு விஜயம் செய்தபோது, நான் இன்று COVID-19 க்கு நேர்மறையானதை பரிசோதித்தேன். கடந்த வாரத்தில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள், தயவுசெய்து தனிமைப்படுத்தி, COVID-19 க்கு பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்." என பிரணாப்  பதிவிட்டிருந்தார்.

.