বাংলায় পড়ুন Read in English
This Article is From Aug 19, 2020

நுரையீரல் தொற்று அறிகுறி: பிரணாப் முகர்ஜி உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம்!

உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி கூறிய சில மணி நேரத்தில் மருத்துவமனை தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement
இந்தியா Posted by

நுரையீரல் தொற்று அறிகுறி: பிரணாப் முகர்ஜி உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம்!

Highlights

  • Pranab Mukherjee in hospital since a brain surgery last week
  • He is admitted at Delhi's Army Research and Referral hospital
  • The ex-President had tested positive for coronavirus
New Delhi:

நுரையீரல் தொற்றுநோய்க்கான அறிகுறிகளுக்கு பின்னர், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது என, அவர் சிகிச்சைப் பெற்று வரும் டெல்லி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. 

உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி கூறிய சில மணி நேரத்தில் மருத்துவமனை தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 10ஆம் தேதி அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. 

இதையடுத்து, 84 வயதான அவர் தொடர்ந்து கோமாவில் இருந்து வருகிறார். அதிலிருந்து அவரது நிலை மோசமாகவே இருந்து வருகிறது. 

Advertisement

இந்நிலையில், டெல்லி ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் நோய்தொற்று இருப்பதற்கான அறிகுறி உருவாகியுள்ளதால், அவரது மருத்துவ நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர் வென்டிலேட்டர் ஆதரவுடன் இருந்து வருகிறார். நிபுணர்கள் குழு அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, மருத்துவமனை அறிக்கை வெளிவருவதற்கு முன்பு பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து அவரது டிவிட்டர் பதிவில், உங்கள் அனைவரின் நல்வாழ்த்துக்களாலும், மருத்துவர்களின் தீவிரமான முயற்சியாலும், எனது தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

Advertisement

அவரது உடல் உறுப்புகள் சீராக இயங்குகிறது. அவரது முக்கிய அளவுருக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல் நிலையில் முன்னேற்றத்தின் அறிகுறிகள் கவனிக்கப்பட்டு வருகின்றன! அவர் விரைவாக குணமடைய நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார். 

அபிஜித் முகர்ஜி, பிரணாப் உடல்நிலை குறித்த தகவல்கள் தொடர்ந்து, தனது ட்விட்டரில் தெரிவித்து வருகிறார். 

Advertisement

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அபிஜித் முகர்ஜி தனது ட்விட்டர் பதிவில், மீண்டும் விரைவில் பிரணாப் முகர்ஜி குணமடைந்து நம்முடன் வருவார். நேற்றைய தினம் மருத்துவமனை சென்று தந்தையை சந்தித்தேன். கடவுளின் அருளாலும், உங்களது நல்வாழ்த்துக்களாலும் அவர் தற்போது நலமாக இருக்கிறார். விரைவில் குணமடைந்து அவர் நம்மோடு வருவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். 

பிரணாப் முகர்ஜி கடந்த 2012 முதல் 2017 வரை இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தார்.

Advertisement