This Article is From Aug 18, 2020

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றமில்லை: மருத்துவர்கள் தகவல்!

வென்டிலேட்டர் உதவியுடன் பிரணாப்புக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றமில்லை: மருத்துவர்கள் தகவல்!

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றமில்லை: மருத்துவர்கள் தகவல்!

New Delhi:

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றமில்லை என டெல்லி ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 10ஆம் தேதி அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. 

இதையடுத்து, 84 வயதான அவர் தொடர்ந்து கோமாவில் இருந்து வருகிறார். அதிலிருந்து அவரது நிலை மோசமாகவே இருந்து வருகிறது. 

அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் கூறும்போது, அவரது முக்கிய மற்றும் மருத்துவ அளவுருக்கள் நிலையாக உள்ளதாகவும், தொடர்ந்து அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

மேலும், வென்டிலேட்டர் உதவியுடன் பிரணாப்புக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உடல்நிலை சீராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரணாப் முகர்ஜி கடந்த 2012 முதல் 2017 வரை இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.