This Article is From Sep 10, 2018

பிராங்க் மெசேஜ் : பள்ளிக்கு விடுமுறை அளித்த மாணவன் தற்கொலை செய்து கொண்டான்

அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் பிராங்க் மெசேஜை அனுப்பியது யார் என்பது தெரியவந்தது.

பிராங்க் மெசேஜ் : பள்ளிக்கு விடுமுறை அளித்த மாணவன் தற்கொலை செய்து கொண்டான்

மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து தலைமை ஆசிரியர் கண்டித்த்தால் விபரீதம் ஏற்பட்டது.

Madurai:

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தனது பள்ளி மாணவர்களுக்கு பிராங்க் எஸ்.எம்.எஸ். ஒன்றை அனுப்பியுள்ளான். அந்த எஸ்.எம்.எஸ்ஸில் திங்களன்று பள்ளிக்கு விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை நம்பிய மாணவர்கள் 50 பேர் பள்ளிக்கு வரவே இல்லை. இந்த சம்பவம் பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பின்னர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் பிராங்க் மெசேஜை அனுப்பியது யார் என்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோரை அழைத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கண்டனம் தெரிவித்தார். மேலும் சக மாணவர்களும் பிராங்க் மெசேஜ் மாணவனை கண்டித்தனர்.

இதனால் மனமுடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

.