This Article is From Aug 24, 2020

நீதிமன்ற அவமதிப்பு குறித்து மன்னிப்பு கேட்கப்போவதில்லை; பிரசாந்த் பூஷன் திட்டவட்டம்!

பூஷண் தனது ட்வீட் குறித்து, ஜனநாயகம் மற்றும் அதன் மதிப்புகளைப் பாதுகாக்க வெளிப்படையான விமர்சனம் அவசியம் என்றும் வாதிட்டார்.

தலைமை நீதிபதி குறித்து அவர் வெளியிட்டிருந்த டிவிட் குற்றம் என தீர்பளிக்கப்பட்டிருக்கின்றது.

New Delhi:

சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற செயல்பாடுகளை விமர்சித்ததற்காக வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன் மீது உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டது. இந்த விசாரணையில் பூஷன் குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், தண்டனை குறித்த விவரங்கள், தீர்ப்பு குறித்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால், பின்னர் அறிவிக்கும்படி அவர் கோரியிருந்தார். ஆனால், நீதிமன்றம் பூஷனின் கோரிக்கையை நிராகரித்து, அவருடைய கருத்தினை மறுபரிசீலனை செய்யவும் மன்னிப்புக் கோரவும் மூன்று நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தது.

இன்றுடன் மூன்று நாள் அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில், பூஷன் தனது விமர்சனங்களுக்கு மன்னிப்புக்கோரப் போவதில்லையென தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் என்னுடைய விமர்சனத்திற்கு நான் மன்னிப்புக் கோருவதென்பது உண்மையற்றதாக இருக்கும் என்றும், அப்படிக் கோருவது நான் மிகுந்த மதிப்பிற்குரிய ஒரு நிறுவனத்தை அவமதிப்பதாக இருக்கும் என்றும் பூஷன் தெரிவித்திருக்கிறார்.

பூஷண் தனது ட்வீட் குறித்து, ஜனநாயகம் மற்றும் அதன் மதிப்புகளைப் பாதுகாக்க வெளிப்படையான விமர்சனம் அவசியம் என்றும் வாதிட்டார்.

முன்னதாக, பேச்சு சுதந்திரம் என்பது வரையறையற்றது அல்ல என்றும், நீங்கள் நூற்றுக்கணக்கான நல்ல காரியங்களைச் செய்யலாம், ஆனால் அது பத்து குற்றங்களைச் செய்வதற்கான அனுமதியை உங்களுக்கு வழங்கிடாது என்றும் நீதிபதி மிஸ்ரா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.