பலூன் கேட்டதற்காக தந்தை கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (File)
Prayagraj: பலூன் கேட்டதற்காக வளர்ப்பு மகளை தந்தை கொலை செய்த சம்பவம் உத்திர பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் குல்தாபாத் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் சிறுமி ஒருவர், தனது தந்தையாலே கொலை செய்யப்பட்டுள்ளார். பலூன் கேட்டு நான்கு வயது சிறுமி தொடர்ந்து அடம்பிடிக்கவே கோபத்தில் கொலை செய்ததாக குழந்தையின் தாயார் தெரிவித்துள்ளார்.
காவல்துறை சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டது. கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பிரிஜேஷ் ஶ்ரீவாஸ்தவா இந்த சம்பவம் குறித்து , “ தகவல் தெரிந்து நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்ற போது சிறும் இறந்து விட்டார். குற்றம் சாட்டப்பட்ட சிறுமியின் வளர்ப்பு தந்தை காயமடைந்த நிலையில் காணப்பட்டார். சிறுமியின் தந்தை மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
சிறுமியின் தாயார் கூறும்போது “நானும் என் கணவரும் மருந்துகளை வாங்க வெளியே வந்தோம். என் கணவர் அவளை அடிக்கத் துவங்கினார். நான் அவரை தடுக்க முயன்றபோது என்னை பைக்கில் இருந்து தள்ளி விட்டு மகளை மட்டும் அவருடன் அழைத்துச் சென்றார். இரவு 10.30 மணியளவில் திரும்பி வந்து அறையில் சென்று பூட்டிக் கொண்டார். காலையில் வந்து காவல்துறையிடம் அழைத்து என் மகளை கொன்றதாக புகார் அளித்தேன்” என்று தெரிவித்தார்.
பலூன் கேட்டதற்காக தந்தை கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.