This Article is From Aug 09, 2019

கருக்கலைப்பு தொடர்பான சட்டத்தில் விரைவில் திருத்தம் செய்யப்படும் : மத்திய அரசு

பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பித்தவர்கள் கர்ப்பத்தை கலைக்க கருக்கலைப்புக்கான கர்ப்பகால வரம்பை 20 வாரங்களிலிருந்து 24 வாரங்களாக உயர்த்த முன் மொழியப்பட்டதாக அப்போதைய குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் மக்களவையில் மார்ச் 2018இல் தெரிவித்திருந்தார்.

கருக்கலைப்பு தொடர்பான சட்டத்தில் விரைவில் திருத்தம் செய்யப்படும் : மத்திய அரசு

குறைபாடுள்ள கரு வளர்ச்சியைத் தடுக்க ஒரு மருந்தும் இல்லை என்று நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு பதில் கூறப்பட்டது.

Madurai:

மத்திய அரசு கருக்கலைப்பு தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதர அமைச்சகம் மீண்டும் தொடங்கும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

முன்மொழியப்பட்ட வரைவின் படி 20 முதல் 24 வாரங்கள் வரை சட்டப்படியான கருக்கலைப்புக்கான கர்ப்பகால வரம்பை அதிகரித்து கருக்கலைப்பு தொடர்பான சட்டத்தில் எப்போது திருத்தப்படும் என்று தானே முன்வந்து கொடுத்த மனுவில் உயர்நீதிமன்றம் மத்திய அரசிடம் 

கேள்வி எழுப்பியுள்ளது. 1971 ஆம் ஆண்டின் சட்டத்தை திருத்துவதற்கான செயல்முறையை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மீண்டும் தொடங்கும் என்று. இறுதிவரைவு அமைச்சரவை குறிப்பின் ஒப்புதலைத் தொடர்ந்து அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய அரசு ஆலோசகர் கூறினார்.

தமிழக அரசு கர்ப்பகால வயதிற்கு ஏற்ப தாய்க்கு ஏற்படும் ஆபத்து (20 வாரங்களுக்கு பின் நீடிக்கும் கர்ப்பம்) குறித்து அறிக்கை சமர்பித்தது.

குறைபாடுள்ள கரு வளர்ச்சியைத் தடுக்க ஒரு மருந்தும் இல்லை என்று நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு பதில் கூறப்பட்டது.

மனநல ஆலோசனை உள்ளிட்ட பிந்தைய பராமரிப்பு ஆலோசனைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். 

பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பித்தவர்கள் கர்ப்பத்தை கலைக்க கருக்கலைப்புக்கான கர்ப்பகால வரம்பை 20 வாரங்களிலிருந்து 24 வாரங்களாக உயர்த்த முன் மொழியப்பட்டதாக அப்போதைய குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் மக்களவையில் மார்ச் 2018இல் தெரிவித்திருந்தார்.

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.