This Article is From Oct 18, 2018

ராஜஸ்தானில் கர்பிணிப் பெண் உட்பட 106 பேர் ஜிகா வைரஸால் பாதிப்பு!

மத்திய அரசு, புதன்கிழமையன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக குழுவை ராஜஸ்தானிற்கு அனுப்பி வைத்தது. இக்குழு, நோயின் பாதிப்பு மற்றும் அதனை கட்டுபடுத்துவதற்கான வழிமுறைகள் வகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது

ராஜஸ்தானில் கர்பிணிப் பெண் உட்பட 106 பேர் ஜிகா வைரஸால் பாதிப்பு!

ஜிகா வைரஸ் காய்ச்சல், தசை பிடிப்பு, மூட்டு வலி மற்றும் தோல் அரிப்பினை ஏற்படுத்தும்.

Jaipur:

ராஜஸ்தானில் இதுவரை 106 பேர் ஜிகா வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 25 பேர் கர்பிணிப் பெண்கள். வியாழனன்று மேலும் ஆறு பேர் ஜிகா வைரஸால் தாக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்கள் ஜெய்பூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தனர்,

ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்து வந்த நிலையில் மத்திய அரசு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக குழுவை ராஜஸ்தானிற்கு அனுப்பி வைத்தது. அவர்கள் அப்பகுதி மக்கள் கொசுவை கொல்ல பயன்படுத்தி வந்த பூச்சி மருந்துகளை மாற்றினர். இதன் மூலம் ஜிகா, டெங்கு, சிக்கன் குனியாவை பரப்பும் வைரஸ்களும் கட்டுப்படுத்தப்படும்.

அதிகாரிகள் அளித்த தகவலின் படி, ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு பிறகு தற்போது நலமடைந்துள்ளனர். மூன்று, நான்கு நோயாளிகளிடம் நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லை முற்றிலுமாக குணமடைந்துவிட்டார்கள்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொசுக்களை ஒழிப்பதற்காக தொடர்ந்து புகை மூட்டம், லார்வா ஒழிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

புதன்கிழமையன்று மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, சாஸ்திரி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் 1 லட்சம் வீடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் 330 குழுக்கள் கொசு லார்வாக்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜிகா வைரஸை ஏற்படுத்தும் 'ஏடிஸ் எஜிப்டி' காய்ச்சல், தசை பிடிப்பு, மூட்டு வலி மற்றும் தோல் அரிப்பினை ஏற்படுத்தும். இது கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் ஆபத்தானது.

இதன்மூலம் பிறக்கும் குழந்தைக்கு வழக்கத்தைவிட தலை சிறியதாக பிறப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே இதனை தடுப்பதற்கான முயற்சியில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
 

.