This Article is From Aug 25, 2020

பிரேமலதா சர்ச்சை கருத்து; அதிமுக கூட்டணியில் விரிசலா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

அதிமுக மாபெரும் இயக்கம். ஒற்றுமையுடன் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய உழைப்போம்.

Advertisement
தமிழ்நாடு Posted by

பிரேமலதா சர்ச்சை கருத்து; அதிமுக கூட்டணியில் விரிசலா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

பிரேமலதாவின் சர்ச்சை கருத்தால் அதிமுக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தற்போது அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதாகவும், ஆனால் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே தேமுதிக தொண்டர்களின் விருப்பம் எனவும், பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். இதனால், அதிமுக-தேமுதிக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக சர்ச்சை எழுந்தது. 

இதைத்தொடர்ந்து, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், பிரேமலதா விஜயகாந்த் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அவர், மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக அமைத்த கூட்டணி தொடர்ந்து வருகிறது என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது. அவர்களின் கட்சியின் கருத்தை அவர் கூறியுள்ளார். 

Advertisement

இதனால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுவிட்டதாக கூற முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை, லட்சியம் உண்டு. அதனை அவர்கள் வெளிப்படுத்துவார்கள்.

நாங்கள் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் நிலையில் உள்ளோம். சட்டமன்ற தேர்தலின் போதுதான் கூட்டணி குறித்துச் சொல்ல முடியும். தற்போது கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. அதிமுக மாபெரும் இயக்கம். ஒற்றுமையுடன் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதற்கு கடுமையாக உழைப்போம். 

ஒவ்வொரு கட்சியும் அவர்களது கருத்தைச் சொல்லலாம். அந்தக் கருத்தைச் சொல்வதாலேயே நாங்கள் பலவீனமடைந்துவிட்டதாகக் கருத முடியாது. அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். சின்ன சின்னப் பிரச்சினைகள் இருந்தாலும் தேர்தல் சமயத்தில் அவை சரியாகிவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement