This Article is From Oct 18, 2019

“Doctor பட்டத்தைத்தான் எல்லாரும் வாங்குறாங்களே..!”- முதல்வரைச் சீண்டுகிறாரா பிரேமலாதா

Premalatha on Edappadi's Doctorate- “எல்லோரும் வாங்கும் அளவுக்கு டாக்டர் பட்டம் மலிவாகிவிட்டது”

Advertisement
தமிழ்நாடு Written by

Premalatha on Edappadi's Doctorate- அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக் கட்சியின் தலைவரான ஏ.சி.சண்முகம்தான், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இருக்கும் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘கவுரவ டாக்டர்' பட்டத்தை வழங்க உள்ளது. இது தொடர்பாக தேமுதி-வின் பிரேமலதாவிடம் கேள்விகேட்டபோது, “எல்லோரும் வாங்கும் அளவுக்கு டாக்டர் பட்டம் மலிவாகிவிட்டது” என்று குதர்க்கமாக பதில் அளித்துள்ளார். 

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக் கட்சியின் தலைவரான ஏ.சி.சண்முகம்தான், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் விஜய் மற்றும் விஜயக்குமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது.

இப்படிபட்ட சூழலில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதாவிடம், எடப்பாடியாருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “டாக்டர் பட்டம் என்பது மிகவும் மலிவாகிவிட்டது. இப்போது எல்லோரும் அதை வாங்குகிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு மாநிலத்தின் முதல்வர். அவருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை” என்று முடித்துக் கொண்டார். தேமுதிக-வும் அதிமுக கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement