বাংলায় পড়ুন Read in English हिंदी में पढ़ें
This Article is From Feb 28, 2019

இந்திய ராணுவம் எதற்கும் தயாராக இருக்கிறது! - முப்படை அதிகாரிகள்

முப்படைகளின் பிரதிநிதிகள் இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்திப்பதாக இருந்தது, இதனிடையே இந்திய வீரர் அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்தை தொடர்ந்து, பத்திரிக்கையாளர் சந்திப்பு 2 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று நடைபெற்ற முதல் முப்படை கூட்டு மாநாட்டில் பாகிஸ்தானின் எந்தவொரு நடவடிக்கைக்கும், இந்தியா உடனடி பதிலளி கொடுக்க முப்படைகளும் முழுமையாக தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டில் பாகிஸ்தான் தொடர்ந்து சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருகிறது. தவறான பல தகவல்களை பாகிஸ்தான் அளித்து வருகிறது. அவர்கள் நம்மை தூண்டிவிட்டால், நாம் எதற்கும் தயாராக இருக்கிறோம் என மேஜர் ஜெனரல் சுரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதனால் இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. இதில் பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானம் இந்தியாவின் மிக்-21 ரக விமானத்தின் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

Advertisement

அப்போது விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் விமானி உயிர் தப்பினர் எனினும் அவர் பாகிஸ்தான் கட்டுபாட்டு பகுதியில் இறங்கியதால் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவரை சிறைப்பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து, முப்படைகளின் பிரதிநிதிகள் இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்திப்பதாக இருந்தது, இதனிடையே இந்திய வீரர் அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்தை தொடர்ந்து, பத்திரிக்கையாளர் சந்திப்பு 2 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

இதனிடையே, இன்று இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற 24 பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமானப்படையை சேர்ந்த 8 விமானங்கள் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement