This Article is From Sep 07, 2018

தெலங்கானாவில் முன் கூட்டியே தேர்தல் நடத்த முயற்சிப்பது அபத்தமானது - தேர்தல் ஆணையர்

ஜூன் 2019-ல் தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்போது மக்களின் கவனம் தேசிய பிரச்சனைகள் பக்கம் திரும்பும் என்பதால், சட்டமன்றத்தை கலைத்தார் கேசிஆர்

Hyderabad:

தெலங்கானா மாநிலத்துக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்த, கேசிஆர் எடுத்த முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம். 8 மாதங்களுக்கு முன்பாகவே தேர்தல் நடத்துவதற்காக தெலங்கானா சட்டமன்றத்தை கலைத்தார் கேசிஆர்.

இது அபத்தமானது என்று கூறிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், உச்ச நீதிமன்ற ஆணையின் படி, இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

முதலமைச்சர் பொறுப்பை கேசிஆர் பார்த்துக் கொள்ளும் நிலையை நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது என்றும் கூறினார். ஜூன் 2019-ல் தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் அப்போது நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால், மக்களின் கவனம் தேசிய பிரச்சனைகள் பக்கம் திரும்பும் என்பதால், கேசிஆர் முன் கூட்டியே தேர்தல் நடத்த முடிவெடுத்திருப்பதாக கருதப்படுகிறது.

.