This Article is From Nov 10, 2018

முதல்ல காசு கொடுங்க அப்பறம் ராணுவம் அமைக்கலாம் - ஃப்ரான்ஸை வம்பிழுத்த ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ஃப்ரான்ஸ் சென்று இறங்குவதற்கு முன்பு செய்த ட்வீட் சர்ச்சையாகியுள்ளது

Advertisement
உலகம் Posted by

அமெரிக்க அதிபர் ஃப்ரான்ஸ் சென்று இறங்குவதற்கு முன்பு செய்த ட்வீட் சர்ச்சையாகியுள்ளது. ஃப்ரான்ஸ் அதிபர் மார்க்கான் அமெரிக்கா,சீனா, ரஷ்யா போன்ற நாடுகளிடமிருந்து ஐரோப்பாவை ப் பாதுகாக்க ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ட்ரம்ப் இந்த சர்ச்சையான ட்வீட்டை செய்துள்ளார்.

மேலும் NATO ஒப்பந்தத்துக்கு ஐரோப்பா அளிக்க வேண்டிய பங்கையே இன்னும் சரியாக கட்டவில்லை. இதில் ஐரோப்பிய ராணுவமா என்றும் விமர்சித்துள்ளார் ட்ரம்ப். இந்த முடிவை ட்ரம்ப் "அவமானகரமானது" என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று ஃப்ரான்ஸ் அதிபரை ட்ரம்ப் சந்திக்கிறார். மேலும் 60 உலக தலைவர்கள் இந்த வாரம் பாரிஸில் சந்தித்து முதல் உலகப்போர் முடிந்து 100 வருடங்கள் ஆன நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் ஃப்ரான்ஸில் வானொலி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ஐரோப்பாவின் பாதுகாப்பில் அமெரிக்காவின் தலையீடுகள் குறித்து விவாதிக்கவுள்ளதாக மார்கான் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement