Read in English
This Article is From Feb 01, 2019

''புதிய இந்தியாவை படைக்க மத்திய அரசு பணியாற்றுகிறது'' - குடியரசு தலைவர் ராம்நாத்

முஸ்லிம் பெண்களை சக்தி படுத்தவே முத்தலாக் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா
New Delhi:

புதிய இந்தியாவை படைக்க மத்திய அரசு பணியாற்றி வருகிறது என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. வரும் 13-ம்தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்குழு கூட்டத்தில் ராம்நாத் கோவிந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது-

2014 மக்களவை தேர்தலுக்கு முன்பாக நாடு ஒரு நிச்சயமற்ற தன்மையில் இருந்தது. ஆனால் அதற்கு பின்னர்  புதிய இந்தியாவை படைக்க மத்திய அரசு  உறுதி கொண்டு நடவடிக்கை எடுத்து  வருகிறது.

முஸ்லிம் பெண்களை சக்தி படுத்துவதற்காகத்தான் முத்தலாக் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.  உயர்பிரிவில் ஏழ்மை நிலையில் இருப்போருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை. 

Advertisement

இதன் மூலம் ஏழை சிறுவர்கள், சிறுமிகளுக்கு சமூக நீதி கிடைக்கும். சுவச் பாரத் திட்டத்தின் கீழ் 9 கோடி கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Advertisement