This Article is From Aug 05, 2018

கருணாநிதி குணமடைய வாழ்த்துகிறேன் - நேரில் சந்தித்த குடியரசு தலைவர் ட்வீட்

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க தலைவர் கருணாநிதியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நேரில் சந்தித்தார்

Advertisement
தெற்கு Posted by

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க தலைவர் கருணாநிதியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து குடியரசுத் தலவைர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் “திரு கருணாநிதி அவர்களைச் சென்னையில் சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.” என பதிவிட்டிருந்தார்.

இந்த சந்திப்பின் போது குடியரசு தலைவருடன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் உடனிருந்தார்.

Advertisement