This Article is From Oct 22, 2018

பாதிரியார் ஃபிராங்கோவுக்கு எதிராக பேசிய இன்னொரு பாதிரியார் மர்ம சாவு!

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாதிரியார் ஃபிராங்கோவுக்கு எதிராக பேசிய இன்னொரு பாதிரியார், மர்மமான முறையில் இறந்துள்ளார்

பாதிரியார் ஃபிராங்கோவுக்கு எதிராக பேசிய இன்னொரு பாதிரியார் மர்ம சாவு!

ஜலந்தரைச் சேர்ந்த 60 வயதாகும் பாதிரியார் குரியகோஸ் காட்டுத்தரா, இன்று காலை அவர் தங்கியிருந்த சர்ச்சின் அறையில் மர்மமான முறையில் இறந்துள்ளார். (கோப்புப் படம்)

Jalandhar:

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாதிரியார் ஃபிராங்கோவுக்கு எதிராக பேசிய இன்னொரு பாதிரியார், மர்மமான முறையில் இறந்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக அந்த கன்னியாஸ்திரி காவல்துறையில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். பாலியல் புகார் எழுந்ததை அடுத்து, பாதிரியார் பிராங்கோ, ஜலந்தர் பிஷப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பாதிரியார் ஃபிராங்கோ, நிபந்தணைகளுக்கு உட்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டார். 

ஜலந்தரைச் சேர்ந்த 60 வயதாகும் பாதிரியார் குரியகோஸ் காட்டுத்தரா, இன்று காலை அவர் தங்கியிருந்த சர்ச்சின் அறையில் மர்மமான முறையில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரின் இறப்புக்கு என்னக் காரணம் என்பது குறித்து இதுவரை சரியான தகவல் இல்லை. ஆனால் பாதிரியார் குரியகோஸ் குடும்பத்தினர், மர்ம மரணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. 

பாதிரியார் குரியகோஸ், ஃபிராங்கோவுக்கு எதிரான வழக்கில் சாட்சியாக இருக்கவில்லை. ஆன போதிலும் பாதிரியார் ஃபிராங்கோவுக்கு எதிராக கருத்து கூறினார் குரியகோஸ். அவர் மாத்ருபூமி இதழுக்கு அளித்தப் பேட்டியில், ‘எனக்கு பாதிரியார் ஃபிராங்கோவுக்கு எதிராக பேசக் கூடாது என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக பேசினால் என்ன ஆகும் என்ற அச்சம் எனக்கு உள்ளது' என்று வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாதிரியார் குரியகோஸின் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

.