பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட போது கடைசியாக இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசினர்
New Delhi: பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங், வரும் நவம்பர் மாதம் அர்ஜென்டினாவில் சந்திக்க உள்ளனர் என்று தகவல் தெரிவித்துள்ளார் இந்தியாவுக்கான சீன தூதர்.
ஜி20 மாநாடு நடக்கும் நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று சீன தூதர் லாவோ ஜாவோஹுய் தகவல் தெரிவித்துள்ளார். ஆப்கன் அதிகாரிகளுக்கு இந்தியா - சீனா இணைந்து வழங்கும் பயிற்சி நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் இந்தத் செய்தியை அவர் கூறியுள்ளார்.
இந்தியா - சீனாவுக்கு இடையிலான உறவை மேலும் மேம்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை மாதம் ஜோகன்னஸ்பர்க்கில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங் சந்தித்துப் பேசினார்கள். பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட போது இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
அப்போது, 4 மாதத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் 3வது முறையாக சந்தித்துப் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.