உன்னத தலைவர் மோடி என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- மோடியை உன்னத தலைவன் என்று திண்டுக்கல் சீனிவாசன் பாராட்டியுள்ளார்
- மோடியுடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு இருக்கிறது: திண்டுக்கல் சீனிவாசன்
- அதிமுக மேடைகளில் மோடிக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது
காலையில் ஜப்பான் மாலையில் சைனாவுக்கு சென்று நாட்டின் புகழை பிரதமர் மோடி பரப்பி வருகிறார் என்று அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ள நிலையில் அக்கட்சியை அதிமுக நிர்வாகிகள் புகழ்ந்து பேசி வருகின்றனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக மேடைகளில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது-
மத்திய அரசும் மாநில அரசும் மக்களுக்கு நன்மை செய்து வருகிறது. இரு அரசும் இரண்டு துப்பாக்கிகளை போல செயல்படுகிறது. சிறந்த அதிகாரிகளை நியமித்து மத்திய அரசும் மாநில அரசும் சேவையாற்றி வருகிறது. மக்களுக்கு நன்மை செய்கிற நரேந்திர மோடி, பாமக உடனான கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெறும்.
இன்றைக்கு இந்தியாவின் பிரதமராக ஏற்கனவே 2, 3 முறை இருந்த நரேந்திரமோடி சிறப்பாக செயல்படுகிறார். காலையில் ஜப்பான்… மாலையில் சைனாவுக்கு சென்று இந்தியாவின் புகழை பிரதமர் மோடி பரப்பி வருகிறார். இந்தியா ஓர் வல்லரசு என்கிற சூழலை உருவாக்கி வரும் உன்னத தலைவர் பிரதமர் மோடி. அவருடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு இருக்கிறது?.
இவ்வாறு அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.