বাংলায় পড়ুন Read in English
This Article is From Aug 28, 2019

உலகின் மிகச்சிறந்த 100 இடங்களில் ஒன்றாக குஜராத் படேல் சிலை தேர்வு!

உலகிலேயே மிகவும் உயரமான சிலையாக குஜராத்தில் உள்ள படேல் சிலை கருதப்படுகிறது. இதனை கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம்தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

Advertisement
இந்தியா (with inputs from ANI)

நியூயார்க்கின் சுதந்திர தேவி சிலையை விடவும் இரு மடங்கு உயரமானது படேல் சிலை.

New Delhi:

உலகின் மிகச்சிறந்த 100 இடங்களில் ஒன்றாக குஜராத் படேல் சிலையை பிரபல டைம்ஸ் இதழ் தேர்வு செய்துள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். 

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் சர்தார் வல்லபாய் படேல் சிலை கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இந்த இடம் வடோதராவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலும், அகமதாபாத்தில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. 

அமெரிக்காவில் சுதந்திர தேவி சிலையுடன் ஒப்பிடும்போது படேல் சிலை இரு மடங்கு உயரம் கொண்டதாகும். மொத்தம் 182 அடி உயரம் கொண்டதாக படேல் சிலை கட்டியமைக்கப்பட்டுள்ளது. 
 

295 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினாலும், 6.5 அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டாலும் அவற்றை தாங்கி தாக்குப்பிடிக்கும் திறன் இந்த சிலைக்கு உண்டு. 

இந்த நிலையில் பிரபல டைம்ஸ் இதழ் உலகின் மிகச்சிறந்த 100 இடங்களில் ஒன்றாக படேல் சிலையை அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி வெளிப்படுத்தி உள்ளார். 

Advertisement

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'படேலின் ஒற்றுமையின் சிலை 2019-ல் உலகில் சிறந்த 100 இடங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக ஒரே நாளில் மட்டும் 34 ஆயிரம்பேர் படேல் சிலையை பார்த்துவிட்டு சென்றுள்ளனர். பிரபல சுற்றுலாத்தலமாக இந்த இடம் மாறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று கூறியுள்ளார். 

(With inputs from ANI)

Advertisement
Advertisement