Read in English
This Article is From Jul 02, 2020

'நாட்டின் பொருளாதாரத்தை மோடியும், அமித் ஷாவும் அழிக்கிறார்கள்' - காங்கிரஸ் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகளின் ஆலோசனையை அமித் ஷா ஒருபோதும் கேட்கமாட்டார். அதற்கு பதிலாக வேறு ஏதாவது செய்து விடுகிறார். இதுதான் சிறு குறு தொழில்கள் முடங்கிப்போனதற்கும், நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளதற்கு காரணம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

Advertisement
இந்தியா

கர்நாடக காங்கிரஸ் தலைவராக கட்சியின் மூத்த நிர்வாகியான டி.கே. சிவக்குமார் பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளார்.

Highlights

  • பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
  • எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை ஏற்பதில்லை என புகார் தெரிவித்துள்ளார்
  • கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே. சிவக்குமாறு பொறுப்பேற்றார்
Bengaluru :

நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அழித்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவராக கட்சியின் மூத்த நிர்வாகியான டி.கே. சிவக்குமார் பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது-

சீனாவுடனான மோதல் உள்பட எந்தவொரு பிரச்னையிலும் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் காங்கிரஸ் கட்சியினரைத்தான் குற்றம் சொல்கிறார்கள். ஆனால் பிரச்னைகளுக்கு பொறுப்பேற்று அதை தீர்க்க அவர்கள் தயாராக இல்லை. 

ராஜிவ் காந்தி அறக்கட்டளையில் உள்ள பணம் இந்தியாவின் வளர்ச்சிக்கும், ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் செலவு செய்யப்பட்டது.

Advertisement

இந்தியாவின் பொருளாதாரத்தை மோடியும், அமித் ஷாவும் அழித்து வருகிறார்கள். நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு பாஜகவின் கொள்கைகளும், திட்டங்களும்தான் முக்கிய காரணம். 

எதிர்க்கட்சிகளின் ஆலோசனையை அமித் ஷா ஒருபோதும் கேட்கமாட்டார். அதற்கு பதிலாக வேறு ஏதாவது செய்து விடுகிறார். இதுதான் சிறு குறு தொழில்கள் முடங்கிப்போனதற்கும், நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளதற்கு காரணம்.

Advertisement

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement