Read in English
This Article is From Oct 16, 2018

எரிபொருள் விலையேற்றத்துக்கு பிரதமர் மோடி வைத்த கோரிக்கையை நிராகரித்த சவுதி!

பிரதமர் நரேந்திர மோடி, எண்ணெய் நிறுவனங்களுடனும், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுடனும் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்

Advertisement
இந்தியா
New Delhi:

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, எண்ணெய் நிறுவனங்களுடனும், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுடனும் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது மோடி, ‘உற்பத்தி சார்ந்து தான் எண்ணெய் சந்தை இருக்கிறது. எவ்வளவு எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் மற்றும் அதற்கு என்ன விலை நிர்ணயிக்கலாம் என்பதை எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளே முடிவு செய்கிறார்கள். எண்ணெய் உற்பத்தி போதுமான அளவு இருக்கும் போதும், அதன் விலை நிர்ணயத்தில் இருக்கும் நடைமுறையால், தொடர் விலையேற்றத்தைக் கண்டு வருகிறோம். இதனால் சர்வதேச வர்த்தகம் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. எனவே, எண்ணெய் வாங்குபவர்களுக்கும் எண்ணெயை விற்பவர்களுக்கும் உகந்த விதத்தில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்’ என்று பேசியுள்ளார்.

இதற்கு சவுதி அரேபியாவின் எண்ணெய் துறை அமைச்சர், கலீத் ஏ அல்-ஃபலீ, ‘எண்ணெய் விலையை, உற்பத்தி செய்பவர்கள் மட்டும் அதன் விலையை நிர்ணயிப்பதில்லை. எங்களைப் போன்ற எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் நேரடி கட்டுபாட்டில் இல்லாத பல விஷயங்கள் அதில் அடங்கியிருக்கின்றன. எண்ணெய் உற்பத்தியை மட்டும் தான் நாங்கள் கட்டுப்படுத்த முடியும். அதே நேரத்தில் இந்தியாவுக்கு போதுமான எண்ணெய் சப்ளை செய்வதை நாங்கள் உறுதி படுத்துவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையேற்றம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ, ‘எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மோடிஜி, உங்கள் பாக்கெட்டில் பணத்தைப் போடவில்லை. அப்படியென்றால், அவர் யாரின் பாக்கெட்டில் பணத்தைப் போடுகிறார்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
Advertisement