This Article is From Nov 14, 2018

ஆசிய மாநாட்டில் பங்குபெறும் மோடி- சிங்கப்பூர் வந்தடைந்தார்!

அமெரிக்க துணை அதிபர் பென்ஸ் பிரதமர் மோடியை சிங்கப்பூர் நேரப்படி இன்று 12.30 மணி அளவில் சந்தித்துப் பேசுகிறார் என வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது

ஆசிய மாநாட்டில் பங்குபெறும் மோடி- சிங்கப்பூர் வந்தடைந்தார்!

ஆசிய கூட்டமைப்புகள் மற்றும் இந்தோ பசிபிக் நாடுகள் உடனான உறவை வலுப்படுத்தும் விதமாக தொடர்ந்து இந்தியா உழைக்கும் என்று டெல்லியில் இருந்து சிங்கப்பூருக்குக் கிளம்பும் முன்னர் மோடி பேசினார். 

Singapore:

ஆசிய மாநாட்டில் பங்குபெறுவதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் வந்தடைந்துள்ளார் பிரதமர் மோடி. மேலும், இந்தப் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸை சந்திக்கிறார் பிரதமர் மோடி.

தன்னுடைய சிங்கப்பூர் பயணத்தில் முதலாவதாக ‘சிங்கப்பூர் ஃபின்டெக்' கூட்டமைப்புக்காக உரையாற்ற உள்ளார் மோடி என பிரதமர் அலுவலகத்தின் அதிகாரபூர்வமிக்க ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அதே பக்க பதிவில், ‘சற்று முன்னர் பிரதமர் மோடி சிங்கப்பூர் வந்தடைந்துள்ளார். சிங்கப்பூர் ஃபின்டெக் கூட்டமைப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய பின்னர் தொடர்ந்து இன்றைய நாள் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்குபெறுவார்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

‘கடும் மழையிலும் சிங்கப்பூரில் தன்னை வரவேற்ற இந்திய சமூகத்துக்கு நன்றி' எனத் தன் ட்விட்டர் பக்கத்தில் மோடி தெரிவித்துள்ளார். 

கூடுதலாக, ‘சிங்கப்பூர் வாழ் இந்திய மக்களின் ஆதரவு நெகிழ்ச்சி அளிக்கிறது. அதிகாலையில் கடும் மழையையும் பொருட்படுத்தாது என்னை வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வெளிநாடு வாழ் இந்திய மக்கள் எப்போதும் நம் தேசத்தைப் பெருமைபடுத்துகின்றனர். பலதரப்பட்ட துறைகளிலும் உலகம் முழுவதும் சென்று வென்று வருகினறனர் நம் மக்கள்' என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் மோடி.

ஆசிய கூட்டமைப்புகள் மற்றும் இந்தோ பசிபிக் நாடுகள் உடனான உறவை வலுப்படுத்தும் விதமாக தொடர்ந்து இந்தியா உழைக்கும் என்று டெல்லியில் இருந்து சிங்கப்பூருக்குக் கிளம்பும் முன்னர் மோடி பேசினார். 

மேலும், ஆசிய கூட்டமைப்பு நாடுகள் உடனான உறவும் நட்பும் இந்த மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் பென்ஸ், சிங்கப்பூர் தலைவர் லீ செய்ன் லூங் மற்றும் பல சர்வதேச கூட்டமைப்புகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி இந்த சுற்றுப்பயணத்தில் சந்திக்கிறார்.

அமெரிக்க துணை அதிபர் பென்ஸ் பிரதமர் மோடியை சிங்கப்பூர் நேரப்படி இன்று 12.30 மணி அளவில் சந்தித்துப் பேசுகிறார் என வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த சந்திப்பில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் வெளிப்படையான சுதந்திரமான இந்திய- பசிபிக் அமைவது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
 

.