இந்திய அறிவியல் கூட்டமைப்பின்107வது அமர்வு பெங்களூரில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
Bengaluru/ New Delhi: இந்திய அறிவியல் கூட்டமைப்பின் ப்பின்107வது அமர்வு பெங்களூரில் இன்று தொடங்கியது. இதனை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். இன்று தகவல் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் விஞ்ஞானிகளுக்கு உதவ தனது அரசாங்கம் இதே போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
நாட்டின் இளம் விஞ்ஞானிகளுக்கான தனது குறிக்கோளை பகிர்ந்து கொண்டார். “அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் புதுமை, காப்புரிமை, உற்பத்தி மற்றும் முன்னேற்றம். இந்த படிகள் நம் நாட்டை விரைவான வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும்.” என்று கூறினார்.
இந்தியாவுக்கு “நீர், ஆற்றல் உணவு மற்றும் தாதுக்களின் பரந்த கடல் வளங்களை ஆராய்வதற்கும் வரைபடப்படுத்துவதற்கும் அதனை பொறுப்புடன் பயன்படுத்தவும் தொழில்நுட்பம் அவசியம். விண்வெளி ஆராய்ச்சியில் நமது வெற்றிகள் இப்போது ஆழ்கடலின் புதிய எல்லையில் பிரதிபலிக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
ஐந்து நாள் நிகழ்வில் சுமார் 15,000பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஜெர்மனியில் மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற ஸ்டீபன் ஹெல் மற்றும் இஸ்ரேலின் வெய்ஸ்மேன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸின் கட்டமைப்பு உயிரியல் நிபுணர் அடா இ யோனாத் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
“புதுமைக்கான குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 52 ஆக உயர்ந்துள்ளது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். முந்தைய 50 ஆண்டுகளை விட கடந்த 5 ஆண்டுகளில் எங்கள் திட்டங்கள் அதிக தொழில்நுட்ப வணிக இன்குபெட்டர்களை உருவாக்கியுள்ளன.. இந்த சாதனைகளுக்கு எங்கள் விஞ்ஞானிகளை வாழ்த்துகிறேன்” என்றார்.
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு விஞ்ஞானிகளை கேட்டுக் கொண்டார். “விவசாய நடைமுறைகளுக்கு உதவும் தொழில்நுட்பங்களில் புரட்சி தேவை.”
‘மேக் இன் இந்தியா' என்ற முன் முயற்சியை குறிப்பிட்டவர். “நான் செய்ய விரும்பும் மற்றொரு முக்கியமான விஷயம். மருத்துவ சாதனங்களில் “மேக் இன் இந்தியா” என்பதன் முக்கியத்துவம் நோயறிகிற முன்னேற்றத்தின் பலனை நம் மக்களிடம் கொண்டு வர வேண்டும் என்றார். மகாத்மா காந்தி ஒரு முறை கூறினார் ‘ஆரோக்கியமே உண்மையான செல்வம். தங்கமோ வெள்ளி துண்டுகளோ' அல்ல என்று கூறினார்.