This Article is From Jul 27, 2018

‘இந்தியா - ரஷ்ய உறவு மிக ஆழமானது!’- பிரதமர் மோடி ட்வீட்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

‘இந்தியா - ரஷ்ய உறவு மிக ஆழமானது!’- பிரதமர் மோடி ட்வீட்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

பிரிக்ஸ் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை இன்று ஜோகன்னாஸ்பர்க்கில் சந்தித்துப் பேசின. சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரேசிலின் அதிபர் மிச்சல் டீமர் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமஃபோஸா ஆகியோர் இந்த வருடாந்திர சந்திப்பில் கலந்து கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பது குறித்து உரையாடி வருகின்றனர். பிரிக்ஸ் நாடுகளில் தான், உலகில் இருக்கும் 40 சதவிகித மக்கள் தொகை அடங்கியுள்ளது. இதில் இருக்கும் நாடுகள் வேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்து வருபவை ஆகும். 

அமெரிக்க வர்த்தகப் போர் உச்சத்தில் இருப்பதால், இந்த மாநாடும் இதில் எடுக்கப்படும் முடிவுகளும் மிக முக்கியமானதாக இருக்கும் என்று வல்லுநர்கள் கருத்து கூறுகின்றனர்.

இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு சென்றுள்ள மோடி, புதினை நேரில் சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து பேசியுள்ளார். பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சந்திப்பு குறித்து மோடி, ‘ரஷ்ய அதிபர் புதினுடன் பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து பேசினேன். இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இருக்கும் உறவு என்பது மிக ஆழமானது. இரு நாடுகளும் பல்வேறு விஷயங்களில் தொடர்ந்து இணைந்து செயல்படும்’ என்று பதிவிட்டார். 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.