This Article is From Sep 13, 2019

Modi News: பசு என்கிற சொல்லே பலருக்கு ஷாக் கொடுக்கிறது: பிரதமர் மோடி

புதிய திட்டத்தை ஆரம்பித்து வைத்தபோது பிரதமர் மோடி, விவசாயிகள், கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்டவர்களுடன் உரையாடினார். 

இந்தத் திட்டத்தின் மூலம் 50 கோடி கால்நடைகள் பயனடையும் என்று சொல்லப்படுகிறது. 

New Delhi:

பசுக்களுக்கு நோய் வராமல் காப்பதற்கான திட்டத்தை (NADCP) உத்தர பிரதேச மாநில மதுராவில் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, “சிலர் பசு, ஓம் என்கின்ற வார்த்தைகளைக் கேட்டாலே அதிர்ச்சியாகிறார்கள். அது மிகவும் துரதிர்ஷ்டமானது” என்று பேசியுள்ளார். 

அவர் மேலும், “பசு, ஓம் போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே சிலர், நாடு 16வது நூற்றாண்டுக்கு சென்றுவிட்டதாக நினைக்கிறார்கள். கிராமப்புறப் பொருளாதாரத்தைப் பற்றி பசுவை நீக்கிவிட்டு ஒருவரால் பேச முடியுமா?

இயற்கைக்கும் பொருதார முன்னேற்றத்துக்கும் இடையில் ஒரு சமநிலை இருந்தால் மட்டுமே இந்தியாவை நம்மால் முன்னேற்ற முடியும். நாட்டின் சுற்றுச்சூழல் என்பது எப்போதும் நமது பொருளாதாரத்தில் சம்பந்தமுடையதாகத்தான் உள்ளது” என்று பேசினார்.

பிரதமர் மோடி பொதுக் கூட்டத்தில் பேசியபோது, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் மேடையில் அமர்ந்திருந்தார். அவர், கோராக்பூரில் இருக்கும் தனது வீட்டில் ஒரு பெரிய மாட்டுப் பண்ணையை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இத்திட்டம் மூலம் வரும் 2024 ஆம் ஆண்டு வரை, கால்நடைகளான மாடு, எருமை, ஆடு மற்றும் பன்றிகளுக்கு கால் மற்றும் வாய் வழியாக நோய் வராமல் இருக்க இலவச தடுப்பூசிப் போடப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 50 கோடி கால்நடைகள் பயனடையும் என்று சொல்லப்படுகிறது. 

புதிய திட்டத்தை ஆரம்பித்து வைத்தபோது பிரதமர் மோடி, விவசாயிகள், கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்டவர்களுடன் உரையாடினார். 

.