Read in English
This Article is From Mar 07, 2020

'மருத்துவரின் ஆலோசனைப்படி நடங்கள்; வதந்திகளை நம்பாதீர்கள்' - கொரோனா குறித்து மோடி பேச்சு!!

உலகில் பல்வேறு நாடுகள் 'நமஸ்தே' என்று கூறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சில காரணங்களால் நாம் அந்த பழக்கத்தை விட்டு விட்டோம். அதன் மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு இதுதான் சரியான நேரம் என்கிறார் மோடி.

Advertisement
இந்தியா Edited by

ஒருவரையொருவர் சந்திக்கும்போது கைகள் குலுக்குவதை விட்டு விட்டு நமஸ்தே என்று கூற வேண்டும் என மோடி கூறியுள்ளார்.

Highlights

  • ''நமஸ்தே என்ற வார்த்தை உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து வருகிறது''
  • ''இந்தியர்களிடம் நமஸ்தே கூறும் பழக்கம் குறைந்து விட்டது''
  • ''கொரோனாவை எதிர்கொள்ள மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடங்கள்''
New Delhi:

கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி தடுப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பிரதமர் மோடி பாரதிய ஜனவுஷாதி பரியோஜனா திட்டத்தின் கீழ் பலன் அடைந்தவர்களுடன், வீடியோ கான்பரன்சிங் மூலமாக பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது-

கொரோனா வைரஸ் குறித்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றை நம்பாதீர்கள். மருத்துவர்கள் கூறும் ஆலோசனைப்படி நடங்கள் என்று நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறேன். 

Advertisement

உலகில் பல்வேறு நாடுகள் 'நமஸ்தே' என்று கூறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சில காரணங்களால் நாம் அந்த பழக்கத்தை விட்டு விட்டோம். அதன் மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு இதுதான் சரியான நேரம்.

ஒருவரையொருவர் சந்திக்கும்போது கைகள் குலுக்குவதை விட்டு விட்டு நமஸ்தே என்று கூற வேண்டும். ஜனவுஷாதி கேந்திரா திட்டத்தின் மூலம் ஒரு கோடி குடும்பத்தினர் குறைந்த செலவில் மருந்துகளை பெற்று வருகின்றனர். 

Advertisement

நாடு முழுவதும் 6 ஆயிரம் ஜனவுஷாதி கேந்திரங்கள் உள்ளன. இதனால் நாட்டு மக்களுக்கு ரூ. 2,000 கோடி முதல் ரூ. 2,500 கோடி வரையிலான பணம் மிச்சமாகும்.

இவ்வாறு மோடி தெரிவித்தார்.

Advertisement