This Article is From Nov 17, 2018

சத்தீஸ்கர் பிரசாரத்தில் ட்ரம்ஸ் வாசித்த மோடி… குஷியான பாஜக-வினர்!

வரும் 20 ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி

சத்தீஸ்கர் பிரசாரத்தில் ட்ரம்ஸ் வாசித்த மோடி… குஷியான பாஜக-வினர்!

பரபரப்பான சத்தீஸ்கர் தேர்தல் களத்தில் மோடியின் இந்த செயல் பலரையும் வாவ் போட வைத்துள்ளது

Raipur:

வரும் 20 ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. ராய்பூரில் பாஜக சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட பிரசாரக் கூட்டத்தில் உரையாற்ற மோடி மேடைக்கு வந்தார். அப்போது உள்ளூர் பாஜக தலைவர் சத்தீஸ்கரின், ‘டோலாக்' ட்ரம்ஸை மோடியின் கழுத்தில் மாட்டிவிட்டு, வாசிக்கச் சொன்னார்.

மோடியும் உற்சாகத்துடன் டோலாக்கை வாசித்தார். இதனால், மேடையில் இருந்த பாஜக தலைவர்களும், குவிந்திருந்த கட்சித் தொண்டர்களும் ஆர்ப்பரித்தனர். பரபரப்பான சத்தீஸ்கர் தேர்தல் களத்தில் மோடியின் இந்த செயல் பலரையும் வாவ் போட வைத்துள்ளது.

பிறகு உரையாற்றிய மோடி, ‘மிகவும் அதிக சதவிகிகத்தில் வாக்குப் பதிவு செய்துள்ள பஸ்தர் பகுதி மக்களை நாம் பாராட்ட வேண்டாமா? அவர்களுக்கு எப்படி பாராட்டு தெரிவிப்பது என்று எனக்குத் தெரியும். இன்னும் அதிக சதவிகிதத்தில் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்களியுங்கள்' என்று பேசினார்.

பஸ்தர் பகுதியில் மாவோயிஸ்ட்டுகளின் தாக்கம் அதிகம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். மாவோயிஸ்ட்டுகளின் அச்சுறுத்தலையும் மீறி, சத்தீஸ்கரின் முதற்கட்ட தேர்தலில் 76 சதவிகித வாக்குகள் பதிவானது.

மோடி ட்ரம்ஸ் வாசிப்பது இது முதல் முறையல்ல. சில மாதங்களுக்கு முன்னர் அவர் நேபாளத்துக்கு சென்று போதும், ட்ரம்ஸ் வாசித்தார்.

.