Read in English
This Article is From May 03, 2019

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும்: பிரதமர் மோடி

Cyclone Fani: புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

புயல் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கடற்கடை, பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் படைகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன.

Karauli, Rajasthan:

ஒட்டு மொத்த நாடும், மத்திய அரசும் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் மக்களுக்கு துணையாக நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஃபனி புயல் கரையை கடந்த போது ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் மழையால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ராஜஸ்தானில் இன்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் கிழக்கு மற்றும் தெற்கு கடலோர பகுதியில் உள்ள மக்கள் கடுமையான புயலை எதிர்கொள்ளும் நிலையில், நாம் இங்கு கூடியுள்ளோம். மத்திய அரசானது தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மாநிலங்களுடன் தொடர்பில் இருந்து வருகிறது.

புயல் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கடற்கடை, பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் படைகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. ஒட்டு மொத்த நாடும், மத்திய அரசும் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் மக்களுக்கு துணையாக நிற்கும் என்று நான் உறுதியளிக்கிறேன் என்றார்.

Advertisement

மேலும், அதி தீவிரப்புயல் பாதிப்பு நிவாரண நடவடிக்கைகளுக்காக பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு நேற்றே ரூ.1000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புயல் காரணமாக பிரதமர் மோடியின் ஜார்கிராம் தேர்தல் பிரசாரம் மே.6ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Advertisement