This Article is From Jun 24, 2018

பிரச்சனைகளுக்கு வன்முறை தீர்வாகாது: ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் உரை

கல்வி, ஆரோக்கியம், வணிகம், பாதுகாப்பு ஆகிய துறையை வலுப்படுத்த வேண்டும் என்பது அவரது குறிக்கோளாக இருந்தது

Advertisement
இந்தியா Posted by

Highlights

  • எந்த பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது
  • குரு நானக் பிறந்தநாளை ‘உத்வேக’ நாளாக பெருமையுடன் கொண்டாடலாம்
  • பிரதமர் பேசுகையில் குறிப்பிட்ட சம்பவங்களை பற்றி பேசவில்லை
அடுத்த ஆண்டு, அம்ரித்சர் ஜாலியன் வாலாபாக் நினைவு தினம் 100 ஆண்டுகளை கடக்க உள்ளது. இந்த சம்பவத்தின் மூலம் நாம் கற்றுகொண்டதை நினைவில் வைக்க வேண்டும். “எந்த பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது. அமைதி, அகிம்சையையே இறுதியில் வெல்லும்” என்று பிரதமர் நரேந்திர மோடி ‘மக் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றினார். வன்முறை குறித்து பிரதமர் பேசுகையில் குறிப்பிட்ட சம்பவங்களை பற்றி பேசவில்லை. ஹார்பூரில் மாடுகளை இறைச்சிக்கு பயன்படுத்தியதால், சிலர் தாக்கப்பட்டது குறித்தும், பொய்யான வாட்ஸ்அப் செய்திகளினால் குழந்தை கடத்தல் கும்பல் என சிலர் தாக்கப்பட்டது பற்றியும் பிரதமர் குறிப்பிடவில்லை. எனினும், இந்தியாவின் சுதந்தர போராட்டம் பல ஆண்டுகளை இருந்ததை குறித்தும், அதற்காக பலரும் உயிர் தியாகம் செய்தனர் என்பதை நினைவூட்டினார். “1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தில் அப்பாவி மக்கள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து 2019 ஆம் ஆண்டுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த படுகொலை சம்பவம் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் வெட்கப்படச் செய்தது” என்றார்.

குரு நானக் மற்றும் கபிர்தாஸ் கூறியது போல, மத அடிப்படையிலான பாகுபாடை அழித்து, மனிதநேயத்தை வளர்க்க வேண்டும் என்றார். 2019 ஆம் ஆண்டு சீக்கிய மத குருவான குருநானக்கின் 550வது பிறந்தநாள் “பிரகாஷ் பார்வ்’ கொண்டாடப்பட உள்ளது. “இந்தியர்கள் அனைவரையும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறேன். குரு நானக் பிறந்தநாளை ‘உத்வேக’ நாளாக பெருமையுடன் கொண்டாடலாம். இதற்கான முழு ஆதரவையும் மக்கள் அளிக்க வேண்டும்” என்றார். 15வது நூற்றாண்டின் கவிஞர் கபிர்தாஸ் நினைவிடமான மகார்க்கு வரும் ஜூன் 28 ஆம் தேதி செல்ல இருப்பதாக குறிப்பிட்டார்.

பாரதிய ஜன் சங் நிறுவனர் சியாமா பிரசாத் முக்கர்ஜீயை புகழ்ந்து பேசினார். “52வது வயதிலேயே நாட்டுக்காக உயிரை தியாகம் செய்தவர். முக்கர்ஜீ விரும்பியது போலவே ஒற்றுமையான இந்தியாவாக, நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு இருக்க வேண்டும்” என்றார். இந்தியாவின் முதல் தொழில்துறை அமைச்சராக இருந்து மோக்கர்ஜீ, இந்தியாவின் தொழில்துறை வளர்சிக்கு அடித்தளமாக இருந்து பெரிதும் பங்களித்துள்ளார். 1948 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட முதல் தொழில்துறை சட்டத்திற்கு காரணமாக அமைந்தவர். இந்தியாவின் தொழில்துறையி யாரையும் சார்ந்து இருக்காது, வளர்ச்சிப்பாதையில் பயணிக்க வேண்டும் என்பது முக்கர்ஜீயின் கனவாக இருந்தது” என்றார். கனரக தொழிற்சாலைகள் மட்டும் அல்லாது, ஜவுளி துறை, குடிசைத்தொழில் ஆகியவற்றிக்குமான வளர்ச்சி பாதையை உருவாக்கினார். நேற்று மத்திய பிரதேசத்தில், முக்கர்ஜீக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி. “கல்வி, ஆரோக்கியம், வணிகம், பாதுகாப்பு ஆகிய துறையை வலுப்படுத்த வேண்டும் என்பது அவரது குறிக்கோளாக இருந்தது” என்றார்.

Advertisement
 
Advertisement