This Article is From Jan 16, 2019

பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ் பிரசாரம் மேற்கொள்வது போல் பேசுகிறார்: சி.பி.ஐ-எம்

சபரிமலை விவகாரம் தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சு பயங்கரமானதும், கண்டணத்துக்குறியது என சிபிஐஎம் தெரிவித்துள்ளது.

Advertisement
இந்தியா

கேரள அரசின் செயல்பாடு வரலாற்றில் அவமானகரமான நடவடிக்கை என பிரதமர் மோடி கூறினார்.

New Delhi:

சபரிமலை விவகாரம் தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சு, ஆர்.எஸ்.எஸ் பிரசாரம் மேற்கொள்வது போல் உள்ளது என சிபிஐஎம் கடுமையாக சாடியுள்ளது. மோடியின் பேச்சு பயங்கரமானதும், கண்டணத்துக்குறியது என சிபிஐஎம் தெரிவித்துள்ளது. 

கடந்த 15ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கேரளா வருகை தந்த மோடி அங்கு பேசும் போது, சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளாவில் நடைபெறும் இடதுசாரிகள் அரசையும், எதிர்கட்சியான காங்கிரசையும் கடுமையாக சாடினார்.

சபரிமலை விவகாரத்தில், சிபிஎம் அரசின் நடவடிக்கை வரலாற்றில் எந்த அரசாங்கத்தின் மீதும் இல்லாத அவமானகரமான நடவடிக்கையாக இடம்பெறும். சிபிஎம் அரசு ஆன்மீகத்தையும், மதத்தையும் ஒருபோதும் மதித்தது இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அது மிகவும் வெட்கக்கேடான விஷயமாக மாறும் என்று யாரும் நினைத்ததில்லை, "என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து சிபிஐஎம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் பேச்சு இந்திய அரசியலமைப்பையும் மற்றும் உச்ச நீதிமன்றத்தையும் நேரடியா தாக்குவது போல் உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பையே அரசு பின்பற்றியது, ஆனால் பிரதமர் மோடி இந்த பேச்சு எதிர்காலத்தில் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

Advertisement


 

Advertisement