அக்ஷய் குமாருடன் பிரதமர் நரேந்திர மோடி.
New Delhi: பிரதமர் நரேந்திர மோடியிடம், பாலிவுட் நட்சத்திரம் அக்ஷய் குமார் அரசியல், தேர்தல் தொடர்பான கேள்விகள் இல்லாமல் நடத்திய உரையாடலில், தான் பிரதமராவேன் என்று ஒருபோதும் நினைத்தது கூட இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பரபரப்பான தேர்தல் நேரத்தில், பிரதமர் மோடியுடனான தான் நேர்காணல் மேற்கொண்டதாக பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் மோடியுடன் அக்ஷய் குமார் மேற்கொண்ட நேர்காணலில் சில ஹைலைட்ஸ்;
நான் ஒருபோதும் பிரதமராவேன் என்று நினைத்தது இல்லை, சராசரி மனிதன் அவ்வாறு சிந்திக்க மாட்டான். (நீங்கள் பிரதமராவோம் என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது)
எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தாலே, அதற்காக அனைவருக்கும் லட்டு கொடுத்து மகிழ்ச்சியடையும் குடும்ப பிண்ணியில் இருந்த வந்தவன் நான்.. எனக்கு இது இயற்கைக்கு மாறாக தெரிகிறது. மக்கள் ஏன் என்னை மிகவும் நேசிக்கிறார்கள் என்று நான் சில நேரங்களில் ஆச்சரியப்பட்டுள்ளேன்.
நான் சிறுவனாக இருந்த போது, ராணுவ வீரர்களும், அவர்களின் தேசப்பற்றும் எனக்கு தூண்டுதலாக இருந்தது. ராமகிருஷ்ணா மிஷனில் இருந்தவர்களின் மீதான ஈர்ப்பின் காரணமாக அதில் நானும் என்னை இணைத்து கொண்டேன்.
நான் ஒரு நாடோடியாக இருந்து, என் கேள்விக்கு நானே விடை தேடிக்கொள்பவன்.
ஒருபோதும் இல்லை.. (எப்போதாவது கோபமடைந்துள்ளீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது) கோபம் மனித இயல்பின் ஒரு பகுதியே. இவை எதிர்மறையாக பரவும் உணர்வுகளாகும்.
நான் அலுவலக உதவியாளராக இருந்தது முதல் தற்போது வரை, கோபத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
டிஆர்பி ரேட்டிங்கிற்காக எனது வார்த்தைகள் தவறாக திரிக்கப்படலாம் என்பதால் தான் (நீங்கள் ஏன் காமெடியாக பேசுவதில்லை?) தற்போதைய காலகட்டத்தில் காமெடியாக பேசுவதை தவிர்க்கிறேன். எனினும், தற்போதும் நான் எனது நண்பர்களுடன் காமெடியாக பேசி இருந்து வருகிறேன்.
எதிர்கட்சியிலும் எனக்கு நண்பர்கள் உள்ளனர். குலாம் நபி ஆசாத் எனக்கு நெருங்கிய நண்பர். இதனை நான் தேர்தல் நேரத்தில் கூறக்கூடாது. மம்தா எனக்கு பிரிசுகள் வழங்குவார். பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா எனக்கு இனிப்புகள் வழங்குவார்.
நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது, தீனா வங்கியில் இருந்து வந்தவர்கள் எங்களுக்கு சேமிப்பு கணக்குகளை தொடங்கினார். ஆனால், அதில் எனக்கு போதிய இருப்பு இருந்ததில்லை. இதனால், எனது கணக்கை சோதித்த அதிகாரிகள் செயல்படாமல் இருந்ததால், என் சேமிப்பு கணக்கை முடக்கிவிட்டார்கள்.